புத்தாண்டு இரவு ஆராதனைக்கும் ஆண்டின் முதல் வாழ்த்துக்குமான வசனங்கள்: வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; பின்னானவைகளை மறந்து; வருஷத்தின் துவக்கமுதல் முடிவுமட்டும் கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
Verses for New Year's Eve, the watch-night service and the year's first greeting: thou crownest the year with thy goodness, behold I will do a new thing, forgetting those things which are behind, the eyes of the Lord are upon it from the beginning of the year to the end. Tap a reference to open the verse's own page, with the verses around it.
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
karthar unnai aaseervadhithu, unnaik kaakkakkadavar. karthar thammudaiya mugathai unmel piragaasikkappanni, unmel kirubaiyaayirukkakkadavar. karthar thammudaiya mugathai unmel pirasannamaakki, unakkuch samaadhaanam kattalaiyidakkadavar enbadhae.
எண்ணாகமம் 6:24-26 · Numbers 6:24-26 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
adhu un thevanaagiya karthar visaarikkira thesam, varushathin thuvakkamudhal varushathin mudivumattum eppozhudhum un thevanaagiya kartharin kangal adhinmel vaikkappattirukkum.
உபாகமம் 11:12 · Deuteronomy 11:12 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.
யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
en jeevanulla naalellaam nanmaiyum kirubaiyum ennaith thodarum; naan kartharudaiya veettilae needitha naatkalaay nilaithiruppen.
சங்கீதம் 23:6 · Psalms 23:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
un vazhiyaik kartharukku oppuvithu, avarmel nambikkaiyaayiru; avarae kaariyathai vaaykkappannuvaar.
சங்கீதம் 37:5 · Psalms 37:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
varushathai ummudaiya nanmaiyaal mudisoottugireer; umadhu paadhaigal neyyaayp pozhigiradhu.
சங்கீதம் 65:11 · Psalms 65:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
naangal njaana irudhayamullavargalaagumbadi, engal naatkalai ennum arivai engalukkup podhitharulum.
சங்கீதம் 90:12 · Psalms 90:12 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
needitha naatkalaal avanaith thirupthiyaakki, en iratsippai avanukkuk kaanbippen.
சங்கீதம் 91:16 · Psalms 91:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.
karthar un pokkaiyum un varathaiyum idhumudharkondu endraikkum kaappaar.
சங்கீதம் 121:8 · Psalms 121:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.
நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
ovvondrirkum ovvoru kaalamundu; vaanathin keezhirukkira ovvoru kaariyathukkum ovvoru samayamundu.
பிரசங்கி 3:1 · Ecclesiastes 3:1 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.
ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
mundhinavaigalai ninaikkavendaam; poorvamaanavaigalaich sindhikkavendaam. idho, naan pudhiya kaariyathaich seygiren; ippozhudhae adhu thondrum; neengal adhai ariyeergalaa? naan vanaandharathilae vazhiyaiyum avaandharaveliyilae aarugalaiyum undaakkuven.
ஏசாயா 43:18-19 · Isaiah 43:18-19 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.
எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
naam nirmoolamaagaadhirukkiradhu kartharudaiya kirubaiyae, avarudaiya irakkangalukku mudivillai. avaigal kaalaidhorum pudhiyavaigal; umadhu unmai peridhaayirukkiradhu.
புலம்பல் 3:22-23 · Lamentations 3:22-23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
ippadiyirukka, oruvan kiristhuvukkullirundhaal pudhuchirushtiyaayirukkiraan; pazhaiyavaigal ozhindhuboyina, ellaam pudhidhaayina.
2 கொரிந்தியர் 5:17 · 2 Corinthians 5:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
sagodhararae, adhaip pidithukkondenendru naan ennugiradhillai; ondru seygiren, pinnaanavaigalai maraindhu, munnaanavaigalai naadi, kiristhu yesuvukkul thevan azhaitha parama azhaippin pandhayapporulukkaaga ilakkai nokkith thodarugiren.
பிலிப்பியர் 3:13-14 · Philippians 3:13-14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
yesugiristhu netrum indrum endrum maaraadhavaraayirukkiraar.
எபிரெயர் 13:8 · Hebrews 13:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗