மன்னிப்பைப் பற்றிய வசனங்கள்: நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, தேவன் மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னித்தல்.
Verses on forgiveness: if we confess our sins, as far as the east is from the west, forgiving one another as God forgave you. Tap a reference to open the verse's own page, with the verses around it.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
en naamam tharikkappatta en janangal thangalaith thaazhthi, jebambanni, en mugathaith thedi, thangal pollaadha vazhigalaivittuth thirumbinaal, appozhudhu paralogathilirukkira naan kettu, avargal paavathai mannithu, avargal thesathukku kshemathaik koduppen.
2 நாளாகமம் 7:14 · 2 Chronicles 7:14 அதிகாரம் · chapter →
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.)
naan en akkiramathai maraikkaamal, en paavathai umakku arivithen; en meerudhalgalaik kartharukku arikkaiyiduven endren; thevareer en paavathin thoshathai mannitheer.(selaa.)
சங்கீதம் 32:5 · Psalms 32:5 அதிகாரம் · chapter →
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
thevanae, sutha irudhayathai ennilae sirushtiyum, nilaivaramaana aaviyai en ullathilae pudhuppiyum.
சங்கீதம் 51:10 · Psalms 51:10 அதிகாரம் · chapter →
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
aandavarae, neer nallavarum, mannikkiravarum, ummai nokkik kooppidugira yaavarmelum kirubai migundhavarumaayirukkireer.
சங்கீதம் 86:5 · Psalms 86:5 அதிகாரம் · chapter →
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
merkukkum kizhakkukkum evvalavu thooramo, avvalavu thooramaay avar nammudaiya paavangalai nammai vittu vilakkinaar.
சங்கீதம் 103:12 · Psalms 103:12 அதிகாரம் · chapter →
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
vazhakkaaduvom vaarungal endru karthar sollugiraar; ungal paavangal siverendrirundhaalum uraindha mazhaiyaip pol venmaiyaagum; avaigal irathaambarach sivappaayirundhaalum panjaippolaagum.
ஏசாயா 1:18 · Isaiah 1:18 அதிகாரம் · chapter →
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
naan, naanae un meerudhalgalai en nimithamaagavae kulaithuppodugiren; un paavangalai ninaiyaamalum iruppen.
ஏசாயா 43:25 · Isaiah 43:25 அதிகாரம் · chapter →
அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்தாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
avarukku virodhamaaga naangal kalagambanni, avar theerkkadharisigalaagiya thammudaiya oozhiyakkaararaikkondu engalukku munbaagavaitha avarudaiya niyaayappiramaanangalinbadi nadakkathakthaaga naangal avarudaiya sathathukkuch sevigodaamarponom.
தானியேல் 9:9 · Daniel 9:9 அதிகாரம் · chapter →
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
thamadhu sudhandharathil meedhiyaanavargaludaiya akkiramathaip poruthu, meerudhalai mannikkira thevareerukku oppaana thevan yaar? avar kirubaiseyya virumbugirabadiyaal avar endrendraikkum kobam vaiyaar.
மீகா 7:18 · Micah 7:18 அதிகாரம் · chapter →
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
manusharudaiya thappidhangalai neengal avargalukku mannithaal, ungal paramabidhaa ungalukkum mannippaar.
மத்தேயு 6:14 · Matthew 6:14 அதிகாரம் · chapter →
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
appozhudhu, pedhuru avaridathil vandhu, aandavarae en sagodharan enakku virodhamaayk kutranjeydhu vandhaal, naan ethanaidharam mannikkavendum? ezhudharamattumo endru kettaan. adharku yesu: ezhudharamaathiram alla ezhezhubadhudharamattum endru unakkuch sollugiren.
மத்தேயு 18:21-22 · Matthew 18:21-22 அதிகாரம் · chapter →
நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
neengal jebambannumbodhu, oruvanberil ungalukku yaadhoru kurai undaayirukkumaanaal, paralogathilirukkira ungal pidhaa ungal thappidhangalai ungalukku mannikkumbadi, andhak kuraiyai avanukku manniyungal.
மாற்கு 11:25 · Mark 11:25 அதிகாரம் · chapter →
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
matravargalaik kutravaaligalendru theerkkaadhirungal; appozhudhu neengalum kutravaaligalendru theerkkappadaadhiruppeergal; matravargalai aakkinaikkullaagumbadi theerkkaadhirungal, appozhudhu neengalum aakkinaikkullaagath theerkkappadaadhiruppeergal; vidudhalaibannungal, appozhudhu neengalum vidudhalaibannappaduveergal.
லூக்கா 6:37 · Luke 6:37 அதிகாரம் · chapter →
ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,
aanabadiyinaalae kartharudaiya sannidhaanathilirundhu ilaippaarudhalin kaalangal varumbadikkum, munnae kurikkappatta yesugiristhuvai avar ungalidathil anuppumbadikkum,
அப்போஸ்தலர் 3:19 · Acts 3:19 அதிகாரம் · chapter →
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
aanabadiyaal, kiristhu yesuvukkutpattavargalaayirundhu, maamsathinbadi nadavaamal aaviyinbadiyae nadakkiravargalukku aakkinaitheerppillai.
ரோமர் 8:1 · Romans 8:1 அதிகாரம் · chapter →
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
avarudaiya kirubaiyin aisuvariyathinbadiyae, ivarudaiya irathathinaalae paavamannippaagiya meetpu ivarukkul namakku undaayirukkiradhu.
எபேசியர் 1:7 · Ephesians 1:7 அதிகாரம் · chapter →
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
oruvarukkoruvar thayavaayum manaurukkamaayum irundhu, kiristhuvukkul thevan ungalukku mannithadhubola, neengalum oruvarukkoruvar manniyungal.
எபேசியர் 4:32 · Ephesians 4:32 அதிகாரம் · chapter →
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
oruvaraiyoruvar thaangi, oruvarberil oruvarukkuk kuraibaadu undaanaal, kiristhu ungalukku mannithadhubola, oruvarukkoruvar manniyungal.
கொலோசெயர் 3:13 · Colossians 3:13 அதிகாரம் · chapter →
ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
enenil naan avargal aniyaayangalaik kirubaiyaay mannithu, avargal paavangalaiyum akkiramangalaiyum ini ninaiyaamaliruppen endru karthar sollugiraar.
எபிரெயர் 8:12 · Hebrews 8:12 அதிகாரம் · chapter →
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
nammudaiya paavangalai naam arikkaiyittaal, paavangalai namakku mannithu ellaa aniyaayathaiyum neekki nammaich suthigarippadharku avar unmaiyum needhiyum ullavaraayirukkiraar.
1 யோவான் 1:9 · 1 John 1:9 அதிகாரம் · chapter →