துக்கமும் இழப்பும் பற்றிய வசனங்கள்: துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், தேவன் எல்லாக் கண்ணீரையும் துடைப்பார், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.
Verses for grief and loss: blessed are they that mourn, God shall wipe away all tears, I am the resurrection and the life. Tap a reference to open the verse's own page, with the verses around it.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
naan marana irulin pallathaakkilae nadandhaalum pollaappukkup payappaden; thevareer ennodegooda irukkireer; umadhu kolum umadhu thadiyum ennaith thetrum.
சங்கீதம் 23:4 · Psalms 23:4 அதிகாரம் · chapter →
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
avarudaiya kobam oru nimisham, avarudaiya thayavo neediyavaazhvu; saayangaalathil azhugai thangum, vidiyarkaalathilae kalippundaagum.
சங்கீதம் 30:5 · Psalms 30:5 அதிகாரம் · chapter →
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
norungunda irudhayamullavargalukkuk karthar sameebamaayirundhu, narungunda aaviyullavargalai iratsikkiraar.
சங்கீதம் 34:18 · Psalms 34:18 அதிகாரம் · chapter →
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
en maamsamum en irudhayamum maandubogiradhu; thevan endrendraikkum en irudhayathin kanmalaiyum en pangumaayirukkiraar.
சங்கீதம் 73:26 · Psalms 73:26 அதிகாரம் · chapter →
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
kartharudaiya parisuthavaangalin maranam avar paarvaikku arumaiyaanadhu.
சங்கீதம் 116:15 · Psalms 116:15 அதிகாரம் · chapter →
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
sanjalathaal en aathumaa karaindhubogiradhu; umadhu vasanathinbadi ennai eduthu niruthum.
சங்கீதம் 119:28 · Psalms 119:28 அதிகாரம் · chapter →
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
irudhayam norungundavargalaik kunamaakkugiraar, avargaludaiya kaayangalaik kattugiraar.
சங்கீதம் 147:3 · Psalms 147:3 அதிகாரம் · chapter →
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
ovvondrirkum ovvoru kaalamundu; vaanathin keezhirukkira ovvoru kaariyathukkum ovvoru samayamundu.
பிரசங்கி 3:1 · Ecclesiastes 3:1 அதிகாரம் · chapter →
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
avar maranathai jeyamaay vizhunguvaar; kartharaagiya thevan ellaa mugangalilumirundhu kanneeraith thudaithu, thamadhu janathin nindhaiyai poomiyiliraadhabadikku mutrilum neekkividuvaar; kartharae idhaich sonnaar.
ஏசாயா 25:8 · Isaiah 25:8 அதிகாரம் · chapter →
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
needhimaan madindhubogiraan, oruvarum adhai manadhil vaikkiradhillai; puthimaangal eduthukkollappadugiraargal, aanaalum theenguvaraadhadharkumunnae needhimaan eduthukkollappadugiraan enbadhaich sindhippaar illai. nermaiyaay nadandhavargal samaadhaanathukkul piravesithu thangal padukkaigalil ilaippaarugiraargal.
ஏசாயா 57:1-2 · Isaiah 57:1-2 அதிகாரம் · chapter →
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
aandavar endrendraikkum kaividamaattaar. avar sanjalappaduthinaalum thamadhu migundha kirubaiyinbadi iranguvaar.
புலம்பல் 3:31-32 · Lamentations 3:31-32 அதிகாரம் · chapter →
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
thuyarappadugiravargal paakkiyavaangal; avargal aarudhaladaivaargal.
மத்தேயு 5:4 · Matthew 5:4 அதிகாரம் · chapter →
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
yesu avalai nokki: naanae uyirthezhudhalum jeevanumaayirukkiren, ennai visuvaasikkiravan marithaalum pizhaippaan; uyirodirundhu ennai visuvaasikkiravanevanum endrendraikkum mariyaamalum iruppaan; idhai visuvaasikkiraayaa endraar.
யோவான் 11:25-26 · John 11:25-26 அதிகாரம் · chapter →
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
ungal irudhayam kalangaadhiruppadhaaga; thevanidathil visuvaasamaayirungal, ennidathilum visuvaasamaayirungal. en pidhaavin veettil anega vaasasthalangal undu; appadiyillaadhirundhaal, naan ungalukkuch solliyiruppen; oru sthalathai ungalukkaaga aayathambannappogiren. naan poy ungalukkaaga sthalathai aayathambanninabinbu, naan irukkira idathilae neengalum irukkumbadi, naan marubadiyum vandhu ungalai ennidathil serthukkolluven.
யோவான் 14:1-3 · John 14:1-3 அதிகாரம் · chapter →
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
adhubola neengalum ippozhudhu thukkamadaindhirukkireergal. naan marubadiyum ungalaik kaanben, appozhudhu ungal irudhayam sandhoshappadum, ungal sandhoshathai oruvanum ungalidathilirundhu eduthuppodamaattaan.
யோவான் 16:22 · John 16:22 அதிகாரம் · chapter →
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
aadhalaal ikkaalathup paadugal ini nammidathil velippadum magimaikku oppidathakkavaigal allavendru ennugiren.
ரோமர் 8:18 · Romans 8:18 அதிகாரம் · chapter →
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
maranamae! un koor engae? paadhaalamae! un jeyam engae?
1 கொரிந்தியர் 15:55 · 1 Corinthians 15:55 அதிகாரம் · chapter →
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
namadhu kartharaagiya yesugiristhuvin pidhaavaagiya thevanum, irakkangalin pidhaavum, sagalavidhamaana aarudhalin thevanumaayirukkiravarukku sthothiram. thevanaal engalukku arulappadugira aarudhalinaalae, endha ubathiravathilaagilum agappadugiravargalukku naangal aarudhal seyyath thiraaniyullavargalaagumbadi, engalukku varum sagala ubathiravangalileyum avarae engalukku aarudhalseygiravar.
2 கொரிந்தியர் 1:3-4 · 2 Corinthians 1:3-4 அதிகாரம் · chapter →
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
andriyum, sagodhararae, nithiraiyadaindhavargalinimitham neengal nambikkaiyatravargalaana matravargalaip polath thukkithu, arivillaadhirukka enakku manadhillai. yesuvaanavar marithu pinbu ezhundhirundhaarendru visuvaasikkiromae; appadiyae yesuvukkul nithiraiyadaindhavargalaiyum thevan avarodegoodak konduvaruvaar.
1 தெசலோனிக்கேயர் 4:13-14 · 1 Thessalonians 4:13-14 அதிகாரம் · chapter →
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
avargaludaiya kanneer yaavaiyum thevan thudaippaar; ini maranamumillai, thukkamumillai, alarudhalumillai, varuthamumillai; mundhinavaigal ozhindhuboyina endru vilambinadhu.
வெளிப்படுத்தின விசேஷம் 21:4 · Revelation 21:4 அதிகாரம் · chapter →