22 verses · Tamil and Tanglish · Tamil Old Version

புதிய தொடக்கம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about new beginnings in Tamil

புதிய தொடக்கத்துக்கான வசனங்கள்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்; கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டி; பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடுதல்.

Verses for a new beginning: behold, I make all things new; a new creature in Christ; forgetting those things which are behind. Tap a reference to open the verse's own page, with the verses around it.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.

யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter →

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

un vazhiyaik kartharukku oppuvithu, avarmel nambikkaiyaayiru; avarae kaariyathai vaaykkappannuvaar.

சங்கீதம் 37:5 · Psalms 37:5 அதிகாரம் · chapter →

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

namadhu thevanaith thudhikkum pudhuppaattai avar en vaayilae koduthaar; anegar adhaik kandu, payandhu, kartharai nambuvaargal.

சங்கீதம் 40:3 · Psalms 40:3 அதிகாரம் · chapter →

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

thevanae, sutha irudhayathai ennilae sirushtiyum, nilaivaramaana aaviyai en ullathilae pudhuppiyum.

சங்கீதம் 51:10 · Psalms 51:10 அதிகாரம் · chapter →

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

naangal njaana irudhayamullavargalaagumbadi, engal naatkalai ennum arivai engalukkup podhitharulum.

சங்கீதம் 90:12 · Psalms 90:12 அதிகாரம் · chapter →

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.

நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6 அதிகாரம் · chapter →

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

ovvondrirkum ovvoru kaalamundu; vaanathin keezhirukkira ovvoru kaariyathukkum ovvoru samayamundu.

பிரசங்கி 3:1 · Ecclesiastes 3:1 அதிகாரம் · chapter →

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.

ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter →

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

poorvagaalathil therivikkappattavaigal, idho, niraiveralaayina; pudhiyavaigalaiyum naanae arivikkiren; avaigal thondraadhadharku munnae, avaigalai ungalukkuch sollugiren.

ஏசாயா 42:9 · Isaiah 42:9 அதிகாரம் · chapter →

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

mundhinavaigalai ninaikkavendaam; poorvamaanavaigalaich sindhikkavendaam. idho, naan pudhiya kaariyathaich seygiren; ippozhudhae adhu thondrum; neengal adhai ariyeergalaa? naan vanaandharathilae vazhiyaiyum avaandharaveliyilae aarugalaiyum undaakkuven.

ஏசாயா 43:18-19 · Isaiah 43:18-19 அதிகாரம் · chapter →

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

idho, naan pudhiya vaanathaiyum pudhiya poomiyaiyum sirushtikkiren; mundhinavaigal ini ninaikkappaduvadhumillai, manadhilae thondruvadhumillai.

ஏசாயா 65:17 · Isaiah 65:17 அதிகாரம் · chapter →

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.

எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter →

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

naam nirmoolamaagaadhirukkiradhu kartharudaiya kirubaiyae, avarudaiya irakkangalukku mudivillai. avaigal kaalaidhorum pudhiyavaigal; umadhu unmai peridhaayirukkiradhu.

புலம்பல் 3:22-23 · Lamentations 3:22-23 அதிகாரம் · chapter →

உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

ungalukku navamaana irudhayathaik koduthu, ungal ullathilae pudhidhaana aaviyaik kattalaiyittu, kallaana irudhayathai ungal maamsathilirundhu eduthuppottu sadhaiyaana irudhayathai ungalukkuk koduppen.

எசேக்கியேல் 36:26 · Ezekiel 36:26 அதிகாரம் · chapter →

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

naan ungalidathil anuppina en periya senaiyaagiya vettukkiligalum, pachaikkiligalum, musukkattaip poochigalum, pachaip puzhukkalum patsitha varushangalin vilaivai ungalukkuth thirumba alippen.

யோவேல் 2:25 · Joel 2:25 அதிகாரம் · chapter →

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

mudhalaavadhu thevanudaiya raajyathaiyum avarudaiya needhiyaiyum thedungal; appozhudhu ivaigalellaam ungalukkuk koodak kodukkappadum.

மத்தேயு 6:33 · Matthew 6:33 அதிகாரம் · chapter →

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

neengal indhap pirabanjathirku otha veshandhariyaamal, thevanudaiya nanmaiyum piriyamum paribooranamumaana sitham innadhendru paguthariyathakkadhaaga, ungal manam pudhidhaagiradhinaalae maruroobamaagungal.

ரோமர் 12:2 · Romans 12:2 அதிகாரம் · chapter →

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

ippadiyirukka, oruvan kiristhuvukkullirundhaal pudhuchirushtiyaayirukkiraan; pazhaiyavaigal ozhindhuboyina, ellaam pudhidhaayina.

2 கொரிந்தியர் 5:17 · 2 Corinthians 5:17 அதிகாரம் · chapter →

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

sagodhararae, adhaip pidithukkondenendru naan ennugiradhillai; ondru seygiren, pinnaanavaigalai maraindhu, munnaanavaigalai naadi, kiristhu yesuvukkul thevan azhaitha parama azhaippin pandhayapporulukkaaga ilakkai nokkith thodarugiren.

பிலிப்பியர் 3:13-14 · Philippians 3:13-14 அதிகாரம் · chapter →

சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

singaasanathinmel veetrirundhavar: idho, naan sagalathaiyum pudhidhaakkugiren endraar. pinnum, avar: indha vasanangal sathiyamum unmaiyumaanavaigal, ivaigalai ezhudhu endraar.

வெளிப்படுத்தின விசேஷம் 21:5 · Revelation 21:5 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes