19 verses · Tamil and Tanglish · Tamil Old Version

ஜெபம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about prayer in Tamil

ஜெபத்தைப் பற்றிய வசனங்கள்: கேளுங்கள் கொடுக்கப்படும், என்னை நோக்கிக் கூப்பிடு, இடைவிடாமல் ஜெபியுங்கள், நீதிமானுடைய ஊக்கமான வேண்டுதல்.

Verses on prayer: ask and it shall be given, call unto me, pray without ceasing, the effectual fervent prayer of a righteous man. Tap a reference to open the verse's own page, with the verses around it.

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

aabathukkaalathil ennai nokkik kooppidu; naan unnai viduvippen, nee ennai magimaippaduthuvaay.

சங்கீதம் 50:15 · Psalms 50:15 அதிகாரம் · chapter →

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

andhisandhi mathiyaana velaigalilum naan thiyaanambanni muraiyiduven; avar en sathathaik ketpaar.

சங்கீதம் 55:17 · Psalms 55:17 அதிகாரம் · chapter →

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

thammai nokkik kooppidugira yaavarukkum, unmaiyaayth thammai nokkik kooppidugira yaavarukkum, karthar sameebamaayirukkiraar.

சங்கீதம் 145:18 · Psalms 145:18 அதிகாரம் · chapter →

அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.

appozhudhu neengal koodivandhu, ennaith thozhudhugondu ennai nokki vinnappambannuveergal; naan ungalukkuch sevigoduppen.

எரேமியா 29:12 · Jeremiah 29:12 அதிகாரம் · chapter →

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

ennai nokkik kooppidu, appozhudhu naan unakku utharavu koduthu, nee ariyaadhadhum unakku ettaadhadhumaana periya kaariyangalai unakku arivippen.

எரேமியா 33:3 · Jeremiah 33:3 அதிகாரம் · chapter →

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

neeyo jebambannumbodhu, un araiveettukkul piravesithu, un kadhavaippootti, andharangathilirukkira un pidhaavai nokki jebambannu; appozhudhu andharangathil paarkkira un pidhaa veliyarangamaay unakkup palanalippaar.

மத்தேயு 6:6 · Matthew 6:6 அதிகாரம் · chapter →

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

kelungal, appozhudhu ungalukkuk kodukkappadum; thedungal, appozhudhu kandadaiveergal; thattungal appozhudhu ungalukkuth thirakkappadum.

மத்தேயு 7:7 · Matthew 7:7 அதிகாரம் · chapter →

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

enenil, irandu peraavadhu moondru peraavadhu en naamathinaalae engae koodiyirukkiraargalo, angae avargal naduvilae irukkiren endraar.

மத்தேயு 18:20 · Matthew 18:20 அதிகாரம் · chapter →

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

melum, neengal visuvaasamullavargalaay jebathilae evaigalaik ketpeergalo avaigalaiyellaam peruveergal endraar.

மத்தேயு 21:22 · Matthew 21:22 அதிகாரம் · chapter →

ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

aadhalaal, neengal nindru jebambannumbodhu evaigalai kettukkolveergalo, avaigalaip petrugolvom endru visuvaasiyungal, appozhudhu avaigal ungalukku undaagum endru sollugiren.

மாற்கு 11:24 · Mark 11:24 அதிகாரம் · chapter →

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

sorndhubogaamal eppozhudhum jebambannavendum enbadhaik kurithu avargalukku avar oru uvamaiyaich sonnaar.

லூக்கா 18:1 · Luke 18:1 அதிகாரம் · chapter →

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

neengal ennilum, en vaarthaigal ungalilum nilaithirundhaal, neengal kettukkolvadhedhuvo adhu ungalukkuch seyyappadum.

யோவான் 15:7 · John 15:7 அதிகாரம் · chapter →

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

nambikkaiyilae sandhoshamaayirungal; ubathiravathilae porumaiyaayirungal; jebathilae urudhiyaayth tharithirungal.

ரோமர் 12:12 · Romans 12:12 அதிகாரம் · chapter →

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

endhach samayathilum sagalavidhamaana vendudhalodum vinnappathodum aaviyinaalae jebambanni, adhanboruttu migundha manaurudhiyodum sagala parisuthavaangalukkaagavum pannum vendudhalodum vizhithukkondirungal.

எபேசியர் 6:18 · Ephesians 6:18 அதிகாரம் · chapter →

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.

பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter →

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

eppozhudhum sandhoshamaayirungal. idaividaamal jebambannungal. ellaavatrileyum sthothiranjeyyungal; appadich seyvadhae kiristhu yesuvukkul ungalaikkurithuth thevanudaiya sithamaayirukkiradhu.

1 தெசலோனிக்கேயர் 5:16-18 · 1 Thessalonians 5:16-18 அதிகாரம் · chapter →

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

neengal sosthamadaiyumbadikku, ungal kutrangalai oruvarukkoruvar arikkaiyittu, oruvarukkaaga oruvar jebambannungal. needhimaan seyyum ookkamaana vendudhal migavum pelanulladhaayirukkiradhu.

யாக்கோபு 5:16 · James 5:16 அதிகாரம் · chapter →

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

naam edhaiyaagilum avarudaiya sithathinbadigettaal, avar namakkuch sevigodukkiraarenbadhae avaraip patri naam kondirukkira thairiyam.

1 யோவான் 5:14 · 1 John 5:14 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes