பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
pinbu thevanaagiya karthar: manushan thanimaiyaayiruppadhu nalladhalla, etra thunaiyai avanukku undaakkuven endraar.
20 verses · Tamil and Tanglish · Tamil Old Version
திருமணத்துக்கும் தம்பதிகளுக்குமான வசனங்கள்: இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது.
Verses for a wedding and for marriage: the two shall be one flesh, love is patient and kind, a threefold cord is not quickly broken. Tap a reference to open the verse's own page, with the verses around it.
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
pinbu thevanaagiya karthar: manushan thanimaiyaayiruppadhu nalladhalla, etra thunaiyai avanukku undaakkuven endraar.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
idhinimitham purushan than thagappanaiyum than thaayaiyum vittu, than manaiviyodae isaindhiruppaan; avargal orae maamsamaayiruppaargal.
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
adharku rooth: naan ummaip pinbatraamal ummaivittuth thirumbip povadhaikkurithu, ennodae pesavendaam; neer pogum idathirku naanum varuven; neer thangum idathilae naanum thanguven; ummudaiya janam ennudaiya janam; ummudaiya thevan ennudaiya thevan.
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
karthar veettaik kattaaraagil, adhaik kattugiravargalin pirayaasam virudhaa; karthar nagarathaik kaavaaraagil kaavalaalar vizhithirukkiradhu virudhaa.
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
manaiviyaik kandadaigiravan nanmaiyaanadhaik kandadaigiraan; kartharaal thayaiyum petrukkollugiraan.
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
veedum aasthiyum pidhaakkal vaikkum sudhandharam; puthiyulla manaiviyo karthar arulum eevu.
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
kunasaaliyaana sthireeyaik kandubidippavan yaar? avaludaiya vilai muthukkalaippaarkkilum uyarndhadhu.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
ondiyaayiruppadhilum iruvar koodiyiruppadhu nalam; avargaludaiya pirayaasathinaal avargalukku nalla palanundaagum. oruvan vizhundhaal avan udanaali avanaith thookkividuvaan; ondiyaayirundhu vizhugiravanukku aiyo, avanaith thookkividath thunaiyillaiyae. iranduberaayp paduthukkondirundhaal avargalukkuch soodundaagum; ondiyaayirukkiravanukkuch soodundaavadhu eppadi? oruvanai yaadhaamoruvan merkolla vandhaal iruvarum avanukku edhirthunirkalaam; muppurinool seekkiramaay araadhu.
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
neer ennai umadhu irudhayathinmel muthiraiyaippolavum, umadhu puyathinmel muthiraiyaippolavum vaithukkollum; nesam maranathaippol validhu; nesavairaakkiyam paadhaalathaippol kodidhaayirukkiradhu; adhin thazhal akkinithazhalum adhin juvaalai kadum juvaalaiyumaayirukkiradhu. thiralaana thanneergal nesathai avikkamaattaadhu, vellangalum adhaith thanikkamaattaadhu; oruvan than veettilulla aasthigalaiyellaam nesathukkaagak koduthaalum, adhu mutrilum asattaibannappadum.
உன்னதப்பாட்டு 8:6-7 · Song of Songs 8:6-7 அதிகாரம் · chapter →
இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
ippadi irukkirabadiyaal, avargal iruvaraayiraamal, orae maamsamaayirukkiraargal; aagaiyaal thevan inaithadhai manushan pirikkaadhirukkakkadavan endraar.
ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
aagaiyaal thevan inaithadhai manushan pirikkaadhirukkakkadavan endraar.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
anbu neediya saandhamum thayavumulladhu; anbukkup poraamaiyillai; anbu thannaip pugazhaadhu, irumaappaayiraadhu, ayokkiyamaanadhaich seyyaadhu, tharpozhivai naadaadhu, sinamadaiyaadhu, theengu ninaiyaadhu, aniyaayathil sandhoshappadaamal, sathiyathil sandhoshappadum. sagalathaiyum thaangum, sagalathaiyum visuvaasikkum, sagalathaiyum nambum, sagalathaiyum sagikkum.
1 கொரிந்தியர் 13:4-7 · 1 Corinthians 13:4-7 அதிகாரம் · chapter →
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
ippozhudhu visuvaasam, nambikkai, anbu immoondrum nilaithirukkiradhu; ivaigalil anbae periyadhu.
1 கொரிந்தியர் 13:13 · 1 Corinthians 13:13 அதிகாரம் · chapter →
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
migundha manathaazhmaiyum saandhamum neediya porumaiyum udaiyavargalaay, anbinaal oruvaraiyoruvar thaangi, samaadhaanakkattinaal aaviyin orumaiyaik kaathukkolvadharku jaakkiradhaiyaayirungal.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
purushargalae, ungal manaivigalil anbugoorungal; appadiyae kiristhuvum sabaiyil anbugoorndhu,
எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
eppadiyum, ungalilum avanavan thannidathil anbugooruvadhubola, than manaiviyinidathilum anbugoorakkadavan; manaiviyum purushanidathil payabakthiyaayirukkakkadaval.
இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ivai ellaavatrinmelum, pooranasarkunathin kattaagiya anbaith tharithukkollungal.
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
vivaagam yaavarukkullum kanamulladhaayum, vivaagamanjam asusippadaadhadhaayumiruppadhaaga; vesikkallaraiyum vibasaarakkaararaiyum thevan niyaayandheerppaar.
அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
andhappadi purushargalae, manaiviyaanaval pelaveena paandamaayirukkirabadiyinaal, ungal jebangalukkuth thadaivaraadhabadikku, neengal vivegathodu avargaludanae vaazhndhu, ungaludanegooda avargalum nithiyajeevanaagiya kirubaiyaich sudhandharithukkollugiravargalaanabadiyinaal, avargalukkuch seyyavendiya kanathaich seyyungal.
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
thevanai oruvarum orubodhum kandadhillai; naam oruvaridathil oruvar anbugoorndhaal thevan namakkul nilaithirukkiraar; avarudaiya anbum namakkul pooranappadum.