23 verses · Tamil and Tanglish · Tamil Old Version

ஆசீர்வாதம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about blessing and birthday in Tamil

பிறந்தநாளுக்கும் புத்தாண்டுக்குமான ஆசீர்வாத வசனங்கள்: கர்த்தர் உன்னை ஆசீர்வதித்துக் காக்கக்கடவர், உன் இருதயத்தின் வாஞ்சையின்படி தருவார், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்.

Verses of blessing for a birthday or a new year: the Lord bless thee and keep thee, grant thee according to thine own heart, goodness and mercy all the days of my life. Tap a reference to open the verse's own page, with the verses around it.

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

naan unnaip periya jaadhiyaakki, unnai aaseervadhithu, un peraip perumaippaduthuven; nee aaseervaadhamaay iruppaay.

ஆதியாகமம் 12:2 · Genesis 12:2 அதிகாரம் · chapter →

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

karthar unnai aaseervadhithu, unnaik kaakkakkadavar. karthar thammudaiya mugathai unmel piragaasikkappanni, unmel kirubaiyaayirukkakkadavar. karthar thammudaiya mugathai unmel pirasannamaakki, unakkuch samaadhaanam kattalaiyidakkadavar enbadhae.

எண்ணாகமம் 6:24-26 · Numbers 6:24-26 அதிகாரம் · chapter →

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

indha niyaayappiramaana pusthagam un vaayaivittup piriyaadhiruppadhaaga; idhil ezhudhiyirukkiravaigalinbadiyellaam nee seyyak kavanamaayirukkumbadi, iravum pagalum adhaith thiyaanithukkondiruppaayaaga; appozhudhu nee un vazhiyai vaaykkappannuvaay, appozhudhu puthimaanaagavum nadandhugolluvaay.

யோசுவா 1:8 · Joshua 1:8 அதிகாரம் · chapter →

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

thunmaarkkarudaiya aalosanaiyil nadavaamalum, paavigaludaiya vazhiyil nillaamalum, pariyaasakkaarar utkaarum idathil utkaaraamalum, kartharudaiya vedhathil piriyamaayirundhu, iravum pagalum avarudaiya vedhathil thiyaanamaayirukkira manushan paakkiyavaan. avan neerkkaalgalin oramaay nadappattu, than kaalathil than kaniyaith thandhu, ilaiyudhiraadhirukkira marathaippoliruppaan; avan seyvadhellaam vaaykkum.

சங்கீதம் 1:1-3 · Psalms 1:1-3 அதிகாரம் · chapter →

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

jeevamaarkkathai enakkuth theriyappaduthuveer; ummudaiya samugathil pariboorana aanandhamum, ummudaiya valadhu paarisathil nithiya perinbamum undu.

சங்கீதம் 16:11 · Psalms 16:11 அதிகாரம் · chapter →

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

avar umadhu manaviruppathinbadi umakkuth thandharuli, umadhu aalosanaigalaiyellaam niraivetruvaaraaga.

சங்கீதம் 20:4 · Psalms 20:4 அதிகாரம் · chapter →

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

en jeevanulla naalellaam nanmaiyum kirubaiyum ennaith thodarum; naan kartharudaiya veettilae needitha naatkalaay nilaithiruppen.

சங்கீதம் 23:6 · Psalms 23:6 அதிகாரம் · chapter →

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

kartharidathil manamagizhchiyaayiru; avar un irudhayathin vendudhalgalai unakku arulseyvaar.

சங்கீதம் 37:4 · Psalms 37:4 அதிகாரம் · chapter →

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

thevanaagiya karthar sooriyanum kedagamumaanavar; karthar kirubaiyaiyum magimaiyaiyum aruluvaar; uthamamaay nadakkiravargalukku nanmaiyai vazhangaadhiraar.

சங்கீதம் 84:11 · Psalms 84:11 அதிகாரம் · chapter →

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

naangal engal vaazhnaalellaam kaligoorndhu magizhumbadi, kaalaiyilae engalai umadhu kirubaiyaal thirupthiyaakkum.

சங்கீதம் 90:14 · Psalms 90:14 அதிகாரம் · chapter →

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

nanmaiyinaal un vaayaith thirupthiyaakkugiraar; kazhugukkuch samaanamaay un vayadhu thirumba vaala vayadhubolaagiradhu.

சங்கீதம் 103:5 · Psalms 103:5 அதிகாரம் · chapter →

கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

karthar ungalaiyum ungal pillaigalaiyum varthikkappannuvaar. vaanathaiyum poomiyaiyum padaitha kartharaalae neengal aaseervadhikkappattavargal.

சங்கீதம் 115:14-15 · Psalms 115:14-15 அதிகாரம் · chapter →

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

kartharukkup payandhu, avar vazhigalil nadakkiravan evano, avan paakkiyavaan. un kaigalin pirayaasathai nee saappiduvaay; unakkup paakkiyamum nanmaiyum undaayirukkum.

சங்கீதம் 128:1-2 · Psalms 128:1-2 அதிகாரம் · chapter →

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

naan piramikkathakka adhisayamaay undaakkappattabadiyaal ummaith thudhippen; umadhu kiriyaigal adhisayamaanavaigal. adhu en aathumaavukku nandraayth theriyum.

சங்கீதம் 139:14 · Psalms 139:14 அதிகாரம் · chapter →

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.

எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter →

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

piriyamaanavanae, un aathumaa vaazhgiradhubola nee ellaavatrilum vaazhndhu sugamaayirukkumbadi vendugiren.

3 யோவான் 1:2 · 3 John 1:2 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes