18 verses · Tamil and Tanglish · Tamil Old Version

விசுவாசம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about faith in Tamil

விசுவாசத்தைப் பற்றிய வசனங்கள்: நம்பப்படுகிறவைகளின் உறுதி, கடுகுவிதையளவு விசுவாசம், தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடத்தல்.

Verses on faith: the substance of things hoped for, faith as a grain of mustard seed, walking by faith and not by sight. Tap a reference to open the verse's own page, with the verses around it.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.

நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6 அதிகாரம் · chapter →

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

appadiyae en vaayilirundhu purappadum vasanamum irukkum, adhu verumaiyaay ennidathirkuth thirumbaamal, adhu naan virumbugiradhaicheydhu, naan adhai anuppina kaariyamaagumbadi vaaykkum.

ஏசாயா 55:11 · Isaiah 55:11 அதிகாரம் · chapter →

இதோ அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

idho agangaariyaayirukkiraanae, avanudaiya aathumaa avanukkul semmaiyaanadhalla; than visuvaasathinaalae needhimaan pizhaippaan.

ஆபகூக் 2:4 · Habakkuk 2:4 அதிகாரம் · chapter →

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

adharku yesu: ungal avisuvaasathinaaledhaan; kaduguvidhaiyalavu visuvaasam ungalukku irundhaal neengal indha malaiyaippaarthu, ivvidam vittu appurambo endru solla adhu appuram pom; ungalaal koodaadha kaariyam ondrumiraadhu endru, meyyaagavae ungalukkuch sollugiren.

மத்தேயு 17:20 · Matthew 17:20 அதிகாரம் · chapter →

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

melum, neengal visuvaasamullavargalaay jebathilae evaigalaik ketpeergalo avaigalaiyellaam peruveergal endraar.

மத்தேயு 21:22 · Matthew 21:22 அதிகாரம் · chapter →

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

yesu avanai nokki: nee visuvaasikkakkoodumaanaal aagum, visuvaasikkiravanukku ellaam koodum endraar.

மாற்கு 9:23 · Mark 9:23 அதிகாரம் · chapter →

இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

yesu avargalaip paarthu: manusharaal idhu koodaadhadhudhaan; thevanaal idhu koodaadhadhalla; thevanaalae ellaam koodum endraar.

மாற்கு 10:27 · Mark 10:27 அதிகாரம் · chapter →

ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

aadhalaal, neengal nindru jebambannumbodhu evaigalai kettukkolveergalo, avaigalaip petrugolvom endru visuvaasiyungal, appozhudhu avaigal ungalukku undaagum endru sollugiren.

மாற்கு 11:24 · Mark 11:24 அதிகாரம் · chapter →

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

visuvaasathinaalae needhimaan pizhaippaan endru ezhudhiyirukkirabadi visuvaasathinaal undaagum thevaneedhi visuvaasathirkendru andhach suviseshathinaal velippaduthappadugiradhu.

ரோமர் 1:17 · Romans 1:17 அதிகாரம் · chapter →

இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.

indhath thegathil kudiyirukkaiyil kartharidathil kudiyiraadhavargalaayirukkiromendru arindhum, eppozhudhum thairiyamaayirukkirom.

2 கொரிந்தியர் 5:7 · 2 Corinthians 5:7 அதிகாரம் · chapter →

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

kiristhuvudanegoodach siluvaiyilaraiyappatten; aayinum, pizhaithirukkiren; ini naan alla, kiristhuvae enakkul pizhaithirukkiraar; naan ippozhudhu maamsathil pizhaithirukkiradho, ennil anbugoorndhu enakkaagath thammaithaamae oppukkodutha thevanudaiya kumaaranaippatrum visuvaasathinaalae pizhaithirukkiren.

கலாத்தியர் 2:20 · Galatians 2:20 அதிகாரம் · chapter →

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

kirubaiyinaalae visuvaasathaikkondu iratsikkappatteergal; idhu ungalaal undaanadhalla, idhu thevanudaiya eevu; oruvarum perumaibaaraattaadhabadikku idhu kiriyaigalinaal undaanadhalla;

எபேசியர் 2:8-9 · Ephesians 2:8-9 அதிகாரம் · chapter →

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

visuvaasamaanadhu nambappadugiravaigalin urudhiyum, kaanappadaadhavaigalin nichayamumaayirukkiradhu.

எபிரெயர் 11:1 · Hebrews 11:1 அதிகாரம் · chapter →

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

visuvaasamillaamal thevanukkup piriyamaayiruppadhu koodaadhagaariyam; enendraal, thevanidathil serugiravan avar undendrum, avar thammaithedugiravargalukkup palan alikkiravarendrum visuvaasikkavendum.

எபிரெயர் 11:6 · Hebrews 11:6 அதிகாரம் · chapter →

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.

aanaalum avan evvalavaagilum sandhegappadaamal visuvaasathodae ketkakkadavan; sandhegappadugiravan kaatrinaal adibattu alaigira kadalin alaikku oppaayirukkiraan.

யாக்கோபு 1:6 · James 1:6 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes