17 verses · Tamil and Tanglish · Tamil Old Version

நம்பிக்கை பற்றிய வேத வசனங்கள் Bible verses about hope in Tamil

நம்பிக்கை வசனங்கள்: எதிர்காலத்துக்கான திட்டம், வெட்கப்படுத்தாத நம்பிக்கை, காலைதோறும் புதிய இரக்கங்கள்.

Verses of hope: plans for a future, a hope that does not disappoint, mercies new every morning. Tap a reference to open the verse's own page, with the verses around it.

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

thamakkup payandhu, thamadhu kirubaikkuk kaathirukkiravargalin aathumaakkalai maranathirku vilakki viduvikkavum;

சங்கீதம் 33:18 · Psalms 33:18 அதிகாரம் · chapter →

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

en aathumaavae, nee en kalangugiraay? en enakkul thiyangugiraay? thevanai nokkik kaathiru; en mugathirku iratsippum en thevanumaayirukkiravarai naan innum thudhippen.

சங்கீதம் 42:11 · Psalms 42:11 அதிகாரம் · chapter →

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

kartharukkuk kaathirukkiren; en aathumaa kaathirukkiradhu; avarudaiya vaarthaiyai nambiyirukkiren.

சங்கீதம் 130:5 · Psalms 130:5 அதிகாரம் · chapter →

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

kartharukkuk kaathirukkiravargalo pudhuppelanadaithu, kazhugugalaippolach settaigalai adithu ezhumbuvaargal; avargal odinaalum ilaippadaiyaargal, nadandhaalum sorndhubogaargal.

ஏசாயா 40:31 · Isaiah 40:31 அதிகாரம் · chapter →

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

kartharmel nambikkaivaithu, kartharaith than nambikkaiyaagak kondirukkira manushan paakkiyavaan.

எரேமியா 17:7 · Jeremiah 17:7 அதிகாரம் · chapter →

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.

எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter →

நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

naanovendraal kartharai nokkikkondu, en iratsippin thevanukkuk kaathiruppen; en thevan ennaik kettaruluvaar.

மீகா 7:7 · Micah 7:7 அதிகாரம் · chapter →

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

melum namakku arulappatta parisutha aaviyinaalae theva anbu nammudaiya irudhayangalil ootrappattirukkirabadiyaal, andha nambikkai nammai vetkappaduthaadhu.

ரோமர் 5:5 · Romans 5:5 அதிகாரம் · chapter →

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

andriyum, avarudaiya theermaanathinbadi azhaikkappattavargalaay thevanidathil anbugoorugiravargalukkuch sagalamum nanmaikku edhuvaaga nadakkiradhendru arindhirukkirom.

ரோமர் 8:28 · Romans 8:28 அதிகாரம் · chapter →

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

nambikkaiyilae sandhoshamaayirungal; ubathiravathilae porumaiyaayirungal; jebathilae urudhiyaayth tharithirungal.

ரோமர் 12:12 · Romans 12:12 அதிகாரம் · chapter →

பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

parisutha aaviyin palathinaalae ungalukku nambikkai perugumbadikku, nambikkaiyin thevan visuvaasathinaal undaagum ellaavidha sandhoshathinaalum samaadhaanathinaalum ungalai nirappuvaaraaga.

ரோமர் 15:13 · Romans 15:13 அதிகாரம் · chapter →

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.

andha nambikkai namakku nilaiyum urudhiyum thiraikkullaagap pogiradhumaana aathuma nangooramaayirukkiradhu.

எபிரெயர் 6:19 · Hebrews 6:19 அதிகாரம் · chapter →

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

visuvaasamaanadhu nambappadugiravaigalin urudhiyum, kaanappadaadhavaigalin nichayamumaayirukkiradhu.

எபிரெயர் 11:1 · Hebrews 11:1 அதிகாரம் · chapter →

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

nammudaiya kartharaagiya yesugiristhuvin pidhaavaagiya thevanukku sthothiram undaavadhaaga;

1 பேதுரு 1:3 · 1 Peter 1:3 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes