20 verses · Tamil and Tanglish · Tamil Old Version

நன்றி பற்றிய வேத வசனங்கள் Bible verses about thanksgiving and praise in Tamil

நன்றியும் துதியும் பற்றிய வசனங்கள்: துதியோடே அவருடைய வாசல்களுக்குள் பிரவேசியுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம், கர்த்தர் உண்டாக்கின நாள் இது.

Verses of thanksgiving and praise: enter his gates with thanksgiving, in everything give thanks, this is the day the Lord has made. Tap a reference to open the verse's own page, with the verses around it.

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

karthaavae, en muzhu irudhayathodum ummaith thudhippen; ummudaiya adhisayangalaiyellaam vivarippen.

சங்கீதம் 9:1 · Psalms 9:1 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

karthar en pelanum en kedagamumaayirukkiraar; en irudhayam, avarai nambiyirundhadhu; naan sagaayam petren, aagaiyaal en irudhayam kaligoorugiradhu; en paattinaal avaraith thudhippen.

சங்கீதம் 28:7 · Psalms 28:7 அதிகாரம் · chapter →

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.

thudhithaludanae avar sannidhikku munbaaga vandhu, sangeedhangalaal avarai aarpparithup paadakkadavom.

சங்கீதம் 95:2 · Psalms 95:2 அதிகாரம் · chapter →

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

avar vaasalgalil thudhiyodum, avar piraagaarangalil pugazhchiyodum piravesithu, avaraith thudhithu, avarudaiya naamathai sthothiriyungal.

சங்கீதம் 100:4 · Psalms 100:4 அதிகாரம் · chapter →

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

karthar nallavar, avarudaiya kirubai endrendraikkum, avarudaiya unmai thalaimurai thalaimuraikkum ulladhu.

சங்கீதம் 100:5 · Psalms 100:5 அதிகாரம் · chapter →

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

en aathumaavae, kartharai sthothiri; en muzhu ullamae, avarudaiya parisutha naamathai sthothiri. en aathumaavae, kartharai sthothiri; avar seydha sagala ubagaarangalaiyum maravaadhae.

சங்கீதம் 103:1-2 · Psalms 103:1-2 அதிகாரம் · chapter →

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

en aalayathil aagaaram undaayirukkumbadith thasamabaagangalaiyellaam pandasaalaiyilae konduvaarungal; appozhudhu naan vaanathin palaganigalaith thirandhu, idangollaamarpogumattum ungalmel aaseervaadhathai varushikkamaattenovendru adhinaal ennaich sodhithup paarungal endru senaigalin karthar sollugiraar.

மல்கியா 3:10 · Malachi 3:10 அதிகாரம் · chapter →

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

nammudaiya kartharaagiya yesugiristhuvin naamathinaalae eppozhudhum ellaavatrirkaagavum pidhaavaagiya thevanai sthothirithu,

எபேசியர் 5:20 · Ephesians 5:20 அதிகாரம் · chapter →

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.

பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter →

நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

neengal podhikkappattabadiyae, visuvaasathil urudhippattu, sthothirathodae adhilae peruguveergalaaga.

கொலோசெயர் 2:7 · Colossians 2:7 அதிகாரம் · chapter →

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

vaarthaiyinaalaavadhu kiriyaiyinaalaavadhu, neengal edhaich seydhaalum, adhaiyellaam kartharaagiya yesuvin naamathinaalae seydhu, avar munnilaiyaagap pidhaavaagiya thevanai sthothiriyungal.

கொலோசெயர் 3:17 · Colossians 3:17 அதிகாரம் · chapter →

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ellaavatrileyum sthothiranjeyyungal; appadich seyvadhae kiristhu yesuvukkul ungalaikkurithuth thevanudaiya sithamaayirukkiradhu.

1 தெசலோனிக்கேயர் 5:18 · 1 Thessalonians 5:18 அதிகாரம் · chapter →

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

aagaiyaal, avarudaiya naamathaith thudhikkum udhadugalin kaniyaagiya sthothirabaliyai avarmoolamaay eppodhum thevanukkuch seluthakkadavom.

எபிரெயர் 13:15 · Hebrews 13:15 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes