21 verses · Tamil and Tanglish · Tamil Old Version

பாதுகாப்பு பற்றிய வேத வசனங்கள் Bible verses about protection in Tamil

பாதுகாப்பு வசனங்கள்: சர்வவல்லவரின் நிழல், கட்டளையிடப்பட்ட தூதர்கள், உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது.

Verses of protection: the shadow of the Almighty, angels given charge, no weapon formed against you shall prosper. Tap a reference to open the verse's own page, with the verses around it.

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

karthardhaamae unakku munbaagap pogiravar, avar unnodae iruppaar; avar unnai vittu vilaguvadhumillai, unnaik kaividuvadhumillai; nee payappadavum kalangavum vendaam endraan.

உபாகமம் 31:8 · Deuteronomy 31:8 அதிகாரம் · chapter →

ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

aanaalum karthaavae, neer en kedagamum en magimaiyum, en thalaiyai uyarthugiravarumaayirukkireer.

சங்கீதம் 3:3 · Psalms 3:3 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

karthar en kanmalaiyum, en kottaiyum, en iratsagarum, en thevanum naan nambiyirukkira en thurugamum, en kedagamum, en iratsaniyak kombum, en uyarndha adaikkalamumaayirukkiraar.

சங்கீதம் 18:2 · Psalms 18:2 அதிகாரம் · chapter →

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

naan marana irulin pallathaakkilae nadandhaalum pollaappukkup payappaden; thevareer ennodegooda irukkireer; umadhu kolum umadhu thadiyum ennaith thetrum.

சங்கீதம் 23:4 · Psalms 23:4 அதிகாரம் · chapter →

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

theengunaalil avar ennaith thammudaiya koodaarathil maraithu, ennaith thamadhu koodaara maraivilae olithuvaithu, ennaik kanmalaiyinmel uyarthuvaar.

சங்கீதம் 27:5 · Psalms 27:5 அதிகாரம் · chapter →

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)

neer enakku maraividamaayirukkireer; ennai neer ikkattukku vilakkikkaathu, iratsaniyap paadalgal ennaich soozhndhugollumbadi seyveer. (selaa.)

சங்கீதம் 32:7 · Psalms 32:7 அதிகாரம் · chapter →

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

kartharudaiya thoodhan avarukkup payandhavargalaich soozhap paalayamirangi avargalai viduvikkiraar.

சங்கீதம் 34:7 · Psalms 34:7 அதிகாரம் · chapter →

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

enakku irangum, thevanae, enakku irangum; ummai en aathumaa andikkollugiradhu; vikkinangal kadandhubogumattum umadhu settaigalin nizhalilae vandhu adaiven.

சங்கீதம் 57:1 · Psalms 57:1 அதிகாரம் · chapter →

உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

un vazhigalilellaam unnaikkaakkumbadi unakkaagath thammudaiya thoodhargalukkuk kattalaiyiduvaar.

சங்கீதம் 91:11 · Psalms 91:11 அதிகாரம் · chapter →

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

enakku othaasai varum parvadhangalukku neraaga en kangalai eredukkiren. vaanathaiyum poomiyaiyum undaakkina kartharidathilirundhu enakku othaasai varum.

சங்கீதம் 121:1-2 · Psalms 121:1-2 அதிகாரம் · chapter →

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.

karthar unnai ellaath theengukkum vilakkik kaappaar; avar un aathumaavaik kaappaatruvaar. karthar un pokkaiyum un varathaiyum idhumudharkondu endraikkum kaappaar.

சங்கீதம் 121:7-8 · Psalms 121:7-8 அதிகாரம் · chapter →

பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

parvadhangal erusalemaich sutrilum irukkumaappol, karthar idhumudhal endrendraikkum thammudaiya janathaich sutrilum irukkiraar.

சங்கீதம் 125:2 · Psalms 125:2 அதிகாரம் · chapter →

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

nee thanneergalaik kadakkumbodhu naan unnodu iruppen; nee aarugalaik kadakkumbodhu avaigal unmel puraluvadhillai; nee akkiniyil nadakkumbodhu vegaadhiruppaay; akkinijuvaalai unberil patraadhu.

ஏசாயா 43:2 · Isaiah 43:2 அதிகாரம் · chapter →

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

unakku virodhamaay uruvaakkappadum endha aayudhamum vaaykkaadhebom; unakku virodhamaay niyaayathil ezhumbum endha naavaiyum nee kutrappaduthuvaay; idhu kartharudaiya oozhiyakkaararin sudhandharamum ennaalundaana avargaludaiya needhiyumaayirukkiradhendru karthar solgiraar.

ஏசாயா 54:17 · Isaiah 54:17 அதிகாரம் · chapter →

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

karthar nallavar, ikkattu naalilae aranaana kottai; thammai nambugiravargalai arindhirukkiraar.

நாகூம் 1:7 · Nahum 1:7 அதிகாரம் · chapter →

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

naan adharkuch sutrilum akkini madhilaayirundhu, adhin naduvil magimaiyaaga iruppen endru karthar sollugiraar.

சகரியா 2:5 · Zechariah 2:5 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes