21 verses · Tamil and Tanglish · Tamil Old Version

பயம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about fear and anxiety in Tamil

பயமும் கவலையும் பற்றிய வசனங்கள்: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; ஒன்றுக்குங் கவலைப்படாமல்; தேவன் பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை.

Verses for fear and anxiety: fear not, for I am with you; be anxious for nothing; God has not given us a spirit of fear. Tap a reference to open the verse's own page, with the verses around it.

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

neengal palangondu thidamanadhaayirungal, avargalukkup payappadavum thigaikkavum vendaam; un thevanaagiya, karthardhaamae unnodegooda varugiraar; avar unnai vittu vilaguvadhum illai; unnaik kaividuvadhum illai endru sonnaan.

உபாகமம் 31:6 · Deuteronomy 31:6 அதிகாரம் · chapter →

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.

யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter →

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

naan marana irulin pallathaakkilae nadandhaalum pollaappukkup payappaden; thevareer ennodegooda irukkireer; umadhu kolum umadhu thadiyum ennaith thetrum.

சங்கீதம் 23:4 · Psalms 23:4 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

karthar en velichamum en iratsippumaanavar, yaarukkup payappaduven. karthar en jeevanin pelanaanavar. yaarukku anjuven?

சங்கீதம் 27:1 · Psalms 27:1 அதிகாரம் · chapter →

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

naan kartharaith thedinen, avar enakkuch sevigoduthu, ennudaiya ellaap payathukkum ennai neengalaakkivittaar.

சங்கீதம் 34:4 · Psalms 34:4 அதிகாரம் · chapter →

கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

kartharmel un paarathaivaithuvidu, avar unnai aadharippaar; needhimaanai orubodhum thallaadavottaar.

சங்கீதம் 55:22 · Psalms 55:22 அதிகாரம் · chapter →

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.

ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter →

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

un thevanaayirukkira kartharaagiya naan un valadhugaiyaip pidithu payappadaadhae, naan unakkuth thunainirkiren endru sollugiren.

ஏசாயா 41:13 · Isaiah 41:13 அதிகாரம் · chapter →

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

ippodhum yaakkobae, unnaich sirushtithavarum isravelae unnai uruvaakkinavarumaagiya karthar sollugiradhaavadhu payappadaadhae; unnai meettukkonden; unnaip persolli azhaithen; nee ennudaiyavan.

ஏசாயா 43:1 · Isaiah 43:1 அதிகாரம் · chapter →

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

aagaiyaal naalaikkaagak kavalaippadaadhirungal; naalaiyathinam thannudaiyavaigalukkaagak kavalaippadum. andhandha naalukku adhinadhin paadu podhum.

மத்தேயு 6:34 · Matthew 6:34 அதிகாரம் · chapter →

ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

aadhalaal, payappadaadhirungal; anegam adaikkalaan kuruvigalaip paarkkilum neengal viseshithavargalaayirukkireergal.

மத்தேயு 10:31 · Matthew 10:31 அதிகாரம் · chapter →

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

payappadaadhae sirumandhaiyae, ungalukku raajyathaik kodukka ungalbidhaa piriyamaayirukkiraar.

லூக்கா 12:32 · Luke 12:32 அதிகாரம் · chapter →

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

samaadhaanathai ungalukku vaithuppogiren, ennudaiya samaadhaanathaiyae ungalukkuk kodukkiren; ulagam kodukkirabiragaaram naan ungalukkuk kodukkiradhillai. ungal irudhayam kalangaamalum payappadaamalumiruppadhaaga.

யோவான் 14:27 · John 14:27 அதிகாரம் · chapter →

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

andhappadi, thirumbavum payappadugiradharku neengal adimaithanathin aaviyaip peraamal, appaa pidhaavae, endru kooppidappannugira puthira suvigaarathin aaviyaip petreergal.

ரோமர் 8:15 · Romans 8:15 அதிகாரம் · chapter →

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.

பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter →

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

thevan namakkup payamulla aaviyaik kodaamal, palamum anbum thelindha puthiyumulla aaviyaiyae koduthirukkiraar.

2 தீமோத்தேயு 1:7 · 2 Timothy 1:7 அதிகாரம் · chapter →

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

avar ungalai visaarikkiravaraanabadiyaal, ungal kavalaigalaiyellaam avarmel vaithuvidungal.

1 பேதுரு 5:7 · 1 Peter 5:7 அதிகாரம் · chapter →

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

anbilae payamillai; poorana anbu payathaip purambae thallum; payamaanadhu vedhanaiyulladhu, payappadugiravan anbil pooranappattavan alla.

1 யோவான் 4:18 · 1 John 4:18 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes