21 verses · Tamil and Tanglish · Tamil Old Version

இரட்சிப்பு பற்றிய வேத வசனங்கள் Bible verses about salvation in Tamil

இரட்சிப்பைப் பற்றிய வசனங்கள்: தேவன் உலகத்தை அவ்வளவாய் அன்புகூர்ந்தார், கர்த்தராகிய இயேசுவை உன் வாயினாலே அறிக்கையிட்டால், வானத்தின் கீழ் வேறொரு நாமம் இல்லை.

Verses on salvation: for God so loved the world, confess with your mouth the Lord Jesus, there is none other name under heaven. Tap a reference to open the verse's own page, with the verses around it.

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

karthar en velichamum en iratsippumaanavar, yaarukkup payappaduven. karthar en jeevanin pelanaanavar. yaarukku anjuven?

சங்கீதம் 27:1 · Psalms 27:1 அதிகாரம் · chapter →

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

idho, thevanae en iratsippu; naan payappadaamal nambikkaiyaayiruppen; kartharaagiya yegovaa en pelanum, en keedhamumaanavar; avarae enakku iratsippumaanavar.

ஏசாயா 12:2 · Isaiah 12:2 அதிகாரம் · chapter →

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

nammudaiya meerudhalgalinimitham avar kaayappattu, nammudaiya akkiramangalinimitham avar norukkappattaar; namakkuch samaadhaanathai undubannum aakkinai avarmel vandhadhu; avarudaiya thazhumbugalaal kunamaagirom.

ஏசாயா 53:5 · Isaiah 53:5 அதிகாரம் · chapter →

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

avarudaiya naamathinmel visuvaasamullavargalaay avarai etrukkondavargal ethanaibergalo, athanai pergalum thevanudaiya pillaigalaagumbadi, avargalukku adhigaarangoduthaar.

யோவான் 1:12 · John 1:12 அதிகாரம் · chapter →

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

thevan, thammudaiya oreberaana kumaaranai visuvaasikkiravan evano avan kettuppogaamal nithiyajeevanai adaiyumbadikku, avaraith thandharuli, ivvalavaay ulagathil anbugoorndhaar.

யோவான் 3:16 · John 3:16 அதிகாரம் · chapter →

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

en vasanathaik kettu, ennai anuppinavarai visuvaasikkiravanukku nithiyajeevan undu; avan aakkinaitheerppukkutpadaamal, maranathaivittu neengi, jeevanukkutpattirukkiraan endru meyyaagavae meyyaagavae ungalukkuch sollugiren.

யோவான் 5:24 · John 5:24 அதிகாரம் · chapter →

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

naan avaigalukku nithiyajeevanaik kodukkiren; avaigal orukkaalum kettuppovadhillai, oruvanum avaigalai en kaiyilirundhu parithukkolvadhumillai.

யோவான் 10:28 · John 10:28 அதிகாரம் · chapter →

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

adharku yesu: naanae vazhiyum sathiyamum jeevanumaayirukkiren; ennaaleyallaamal oruvanum pidhaavinidathil varaan.

யோவான் 14:6 · John 14:6 அதிகாரம் · chapter →

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

avaraaleyandri veroruvaraalum iratsippu illai; naam iratsikkappadumbadikku vaanathin keezhengum, manushargalukkullae avarudaiya naamameyallaamal veroru naamam kattalaiyidappadavum illai endraan.

அப்போஸ்தலர் 4:12 · Acts 4:12 அதிகாரம் · chapter →

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

adharku avargal: kartharaagiya yesugiristhuvai visuvaasi, appozhudhu neeyum un veettaarum iratsikkappaduveergal endru solli,

அப்போஸ்தலர் 16:31 · Acts 16:31 அதிகாரம் · chapter →

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

naam paavigalaayirukkaiyil kiristhu namakkaaga marithadhinaalae, thevan nammel vaitha thamadhu anbai vilangappannugiraar.

ரோமர் 5:8 · Romans 5:8 அதிகாரம் · chapter →

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

paavathin sambalam maranam; thevanudaiya kirubaivaramo nammudaiya kartharaagiya yesugiristhuvinaal undaana nithiyajeevan.

ரோமர் 6:23 · Romans 6:23 அதிகாரம் · chapter →

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

ennavendraal, kartharaagiya yesuvai nee un vaayinaalae arikkaiyittu, thevan avarai marithorilirundhu ezhuppinaarendru un irudhayathilae visuvaasithaal iratsikkappaduvaay.

ரோமர் 10:9 · Romans 10:9 அதிகாரம் · chapter →

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

kirubaiyinaalae visuvaasathaikkondu iratsikkappatteergal; idhu ungalaal undaanadhalla, idhu thevanudaiya eevu; oruvarum perumaibaaraattaadhabadikku idhu kiriyaigalinaal undaanadhalla;

எபேசியர் 2:8-9 · Ephesians 2:8-9 அதிகாரம் · chapter →

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

ellaa manusharum iratsikkappadavum, sathiyathai arigira arivai adaiyavum, avar sithamullavaraayirukkiraar.

1 தீமோத்தேயு 2:4 · 1 Timothy 2:4 அதிகாரம் · chapter →

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

naam seydha needhiyin kiriyaigalinimitham avar nammai iratsiyaamal, thamadhu irakkathinbadiyae, marujenma muzhukkinaalum, parisutha aaviyinudaiya pudhidhaakkudhalinaalum nammai iratsithaar.

தீத்து 3:5 · Titus 3:5 அதிகாரம் · chapter →

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

idho, vaasarpadiyilae nindru thattugiren; oruvan en sathathaikkettu, kadhavaith thirandhaal, avanidathil naan piravesithu, avanodae pojanambannuven, avanum ennodae pojanambannuvaan.

வெளிப்படுத்தின விசேஷம் 3:20 · Revelation 3:20 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes