சமாதான வசனங்கள்: உலகம் கொடுக்காத சமாதானம், தேவனைச் சார்ந்த மனதுக்குப் பூரண சமாதானம், புத்திக்கெட்டாத சமாதானம்.
Verses of peace: a peace the world cannot give, perfect peace for a mind stayed on God, the peace that passes understanding. Tap a reference to open the verse's own page, with the verses around it.
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
karthar unnai aaseervadhithu, unnaik kaakkakkadavar. karthar thammudaiya mugathai unmel piragaasikkappanni, unmel kirubaiyaayirukkakkadavar. karthar thammudaiya mugathai unmel pirasannamaakki, unakkuch samaadhaanam kattalaiyidakkadavar enbadhae.
எண்ணாகமம் 6:24-26 · Numbers 6:24-26 அதிகாரம் · chapter →
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
samaadhaanathodae paduthukkondu nithiraiseyven; karthaavae, neer oruvarae ennaich sugamaayth thangappannugireer.
சங்கீதம் 4:8 · Psalms 4:8 அதிகாரம் · chapter →
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
karthar thamadhu janathirkup pelangoduppaar; karthar thamadhu janathirkuch samaadhaanam aruli, avargalai aaseervadhippaar.
சங்கீதம் 29:11 · Psalms 29:11 அதிகாரம் · chapter →
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
neengal amarndhirundhu, naanae thevanendru arindhugollungal; jaadhigalukkullae uyarndhiruppen, poomiyilae uyarndhiruppen.
சங்கீதம் 46:10 · Psalms 46:10 அதிகாரம் · chapter →
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
thevanaiyae nokki en aathumaa amarndhirukkiradhu; avaraal en iratsippu varum.
சங்கீதம் 62:1 · Psalms 62:1 அதிகாரம் · chapter →
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
ummudaiya vedhathai nesikkiravargalukku migundha samaadhaanamundu; avargalukku idaralillai.
சங்கீதம் 119:165 · Psalms 119:165 அதிகாரம் · chapter →
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
oruvanudaiya vazhigal kartharukkup piriyamaayirundhaal, avanudaiya sathurukkalum avanodae samaadhaanamaagumbadi seyvaar.
நீதிமொழிகள் 16:7 · Proverbs 16:7 அதிகாரம் · chapter →
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
namakku oru paalagan pirandhaar; namakku oru kumaaran kodukkappattaar; karthathuvam avar tholinmelirukkum; avar naamam adhisayamaanavar, aalosanaik karthaa, vallamaiyulla thevan, nithiya pidhaa, samaadhaanappirabu ennappadum.
ஏசாயா 9:6 · Isaiah 9:6 அதிகாரம் · chapter →
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ummai urudhiyaayp patrikkonda manadhaiyudaiyavan ummaiyae nambiyirukkirabadiyaal, neer avanaip poorana samaadhaanathudan kaathukkolveer.
ஏசாயா 26:3 · Isaiah 26:3 அதிகாரம் · chapter →
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
malaigal vilaginaalum, parvadhangal nilaibeyarndhaalum, en kirubai unnaivittu vilagaamalum, en samaadhaanathin udanbadikkai nilaibeyaraamalum irukkum endru, unmel manadhurugugira karthar sollugiraar.
ஏசாயா 54:10 · Isaiah 54:10 அதிகாரம் · chapter →
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
samaadhaanam pannugiravargal paakkiyavaangal; avargal thevanudaiya puthirar ennappaduvaargal.
மத்தேயு 5:9 · Matthew 5:9 அதிகாரம் · chapter →
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
samaadhaanathai ungalukku vaithuppogiren, ennudaiya samaadhaanathaiyae ungalukkuk kodukkiren; ulagam kodukkirabiragaaram naan ungalukkuk kodukkiradhillai. ungal irudhayam kalangaamalum payappadaamalumiruppadhaaga.
யோவான் 14:27 · John 14:27 அதிகாரம் · chapter →
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
ennidathil ungalukkuch samaadhaanam undaayirukkum poruttu ivaigalai ungalukkuch sonnen. ulagathil ungalukku ubathiravam undu, aanaalum thidangollungal; naan ulagathai jeyithen endraar.
யோவான் 16:33 · John 16:33 அதிகாரம் · chapter →
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ivvidhamaaga, naam visuvaasathinaalae needhimaangalaakkappattirukkirabadiyaal, nammudaiya kartharaagiya yesugiristhumoolamaay thevanidathil samaadhaanam petrirukkirom.
ரோமர் 5:1 · Romans 5:1 அதிகாரம் · chapter →
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
parisutha aaviyin palathinaalae ungalukku nambikkai perugumbadikku, nambikkaiyin thevan visuvaasathinaal undaagum ellaavidha sandhoshathinaalum samaadhaanathinaalum ungalai nirappuvaaraaga.
ரோமர் 15:13 · Romans 15:13 அதிகாரம் · chapter →
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.
பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter →
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
thevasamaadhaanam ungal irudhayangalil aalakkadavadhu, idharkendrae neengal orae sareeramaaga azhaikkappatteergal; nandriyaridhalullavargalaayumirungal.
கொலோசெயர் 3:15 · Colossians 3:15 அதிகாரம் · chapter →
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
samaadhaanathin karthardhaamae eppozhudhum sagalavidhathilum ungalukkuch samaadhaanathaith thandharuluvaaraaga. karthar ungalanaivarodungooda iruppaaraaga.
2 தெசலோனிக்கேயர் 3:16 · 2 Thessalonians 3:16 அதிகாரம் · chapter →