20 verses · Tamil and Tanglish · Tamil Old Version

பெலன் பற்றிய வேத வசனங்கள் Bible verses about strength in Tamil

பெலன் குறையும் நேரத்துக்கான வசனங்கள்: சோர்ந்தவனுக்குப் பெலன் தரும் தேவன், தொடர்ந்து செல்லும் தைரியம், பலவீனத்தில் பூரணமாகும் வல்லமை.

Verses for when strength runs out: God as the strength of the weary, the courage to go on, the power that is made perfect in weakness. Tap a reference to open the verse's own page, with the verses around it.

கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

karthar en pelanum en keedhamumaanavar; avar enakku iratsippumaanavar; avarae en thevan, avarukku vaasasthalathai aayathambannuven; avarae en thagappanudaiya thevan, avarai uyarthuven;

யாத்திராகமம் 15:2 · Exodus 15:2 அதிகாரம் · chapter →

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

neengal palangondu thidamanadhaayirungal, avargalukkup payappadavum thigaikkavum vendaam; un thevanaagiya, karthardhaamae unnodegooda varugiraar; avar unnai vittu vilaguvadhum illai; unnaik kaividuvadhum illai endru sonnaan.

உபாகமம் 31:6 · Deuteronomy 31:6 அதிகாரம் · chapter →

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.

யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter →

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

pinnum avan avargalai nokki: neengal poyk kozhumaiyaanadhaip pusithu, madhuramaanadhaik kudithu, ondrumillaadhavargalukkup pangugalai anuppungal; indha naal nammudaiya aandavarukkup parisuthamaana naal, visaarappadavendaam; kartharukkul magizhchiyaayiruppadhae ungaludaiya pelan endraan.

நெகேமியா 8:10 · Nehemiah 8:10 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

karthar en kanmalaiyum, en kottaiyum, en iratsagarum, en thevanum naan nambiyirukkira en thurugamum, en kedagamum, en iratsaniyak kombum, en uyarndha adaikkalamumaayirukkiraar.

சங்கீதம் 18:2 · Psalms 18:2 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

karthar en velichamum en iratsippumaanavar, yaarukkup payappaduven. karthar en jeevanin pelanaanavar. yaarukku anjuven?

சங்கீதம் 27:1 · Psalms 27:1 அதிகாரம் · chapter →

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

karthar en pelanum en kedagamumaayirukkiraar; en irudhayam, avarai nambiyirundhadhu; naan sagaayam petren, aagaiyaal en irudhayam kaligoorugiradhu; en paattinaal avaraith thudhippen.

சங்கீதம் 28:7 · Psalms 28:7 அதிகாரம் · chapter →

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

kartharukkuk kaathirukkiravargalae, neengalellaarum thidamanadhaayirungal, avar ungal irudhayathai sthirappaduthuvaar.

சங்கீதம் 31:24 · Psalms 31:24 அதிகாரம் · chapter →

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

en maamsamum en irudhayamum maandubogiradhu; thevan endrendraikkum en irudhayathin kanmalaiyum en pangumaayirukkiraar.

சங்கீதம் 73:26 · Psalms 73:26 அதிகாரம் · chapter →

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

sorndhubogiravanukku avar pelan koduthu, sathuvamillaadhavanukkuch sathuvathaip perugappannugiraar.

ஏசாயா 40:29 · Isaiah 40:29 அதிகாரம் · chapter →

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

kartharukkuk kaathirukkiravargalo pudhuppelanadaithu, kazhugugalaippolach settaigalai adithu ezhumbuvaargal; avargal odinaalum ilaippadaiyaargal, nadandhaalum sorndhubogaargal.

ஏசாயா 40:31 · Isaiah 40:31 அதிகாரம் · chapter →

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.

ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter →

ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

aandavaraagiya karthar enbelan; avar en kaalgalai maangaalgalaippolaakki, uyaramaana sthalangalil ennai nadakkappannuvaar. idhu neginoth ennum vaathiyathil vaasikka iraagathalaivanukku oppuvikkappatta sangeedham.

ஆபகூக் 3:19 · Habakkuk 3:19 அதிகாரம் · chapter →

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

adharku avar: en kirubai unakkuppodhum; palaveenathilae en palam pooranamaay vilangum endraar. aagaiyaal, kiristhuvin vallamai enmel thangumbadi, en palaveenangalaikkurithu naan migavum sandhoshamaay menmaibaaraattuven.

2 கொரிந்தியர் 12:9 · 2 Corinthians 12:9 அதிகாரம் · chapter →

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

thevan namakkup payamulla aaviyaik kodaamal, palamum anbum thelindha puthiyumulla aaviyaiyae koduthirukkiraar.

2 தீமோத்தேயு 1:7 · 2 Timothy 1:7 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes