ஞானமும் வழிநடத்துதலும் பற்றிய வசனங்கள்: முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை, ஞானத்தின் ஆரம்பமாகிய கர்த்தருக்குப் பயப்படுதல், என் கால்களுக்குத் தீபம்.
Verses on wisdom and guidance: trust in the Lord with all your heart, the fear of the Lord as the beginning of wisdom, a lamp unto my feet. Tap a reference to open the verse's own page, with the verses around it.
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.
karthaavae, ummudaiya vazhigalai enakkuth theriviyum; ummudaiya paadhaigalai enakkup podhitharulum. ummudaiya sathiyathilae ennai nadathi, ennaip podhitharulum; neerae en iratsippin thevan, ummai nokki naal muzhudhum kaathirukkiren.
சங்கீதம் 25:4-5 · Psalms 25:4-5 அதிகாரம் · chapter →
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
naan unakkup podhithu, nee nadakkavendiya vazhiyai unakkuk kaattuven; unmel en kannai vaithu, unakku aalosanai solluven.
சங்கீதம் 32:8 · Psalms 32:8 அதிகாரம் · chapter →
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
nalla manushanudaiya nadaigal kartharaal urudhippadum, avanudaiya vazhiyinmel avar piriyamaayirukkiraar.
சங்கீதம் 37:23 · Psalms 37:23 அதிகாரம் · chapter →
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
naangal njaana irudhayamullavargalaagumbadi, engal naatkalai ennum arivai engalukkup podhitharulum.
சங்கீதம் 90:12 · Psalms 90:12 அதிகாரம் · chapter →
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
ummudaiya vasanam en kaalgalukkuth theebamum, en paadhaikku velichamumaayirukkiradhu.
சங்கீதம் 119:105 · Psalms 119:105 அதிகாரம் · chapter →
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
kartharukkup payappadudhalae njaanathin aarambam; moodar njaanathaiyum podhagathaiyum asattaibannugiraargal.
நீதிமொழிகள் 1:7 · Proverbs 1:7 அதிகாரம் · chapter →
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
karthar njaanathaith tharugiraar; avar vaayinindru arivum puthiyum varum.
நீதிமொழிகள் 2:6 · Proverbs 2:6 அதிகாரம் · chapter →
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.
நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6 அதிகாரம் · chapter →
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
njaanathaik kandadaigira manushanum, puthiyaich sambaadhikkira manushanum paakkiyavaangal.
நீதிமொழிகள் 3:13 · Proverbs 3:13 அதிகாரம் · chapter →
ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
njaanamae mukkiyam njaanathaich sambaadhi; ennathaich sambaadhithaalum puthiyaich sambaadhithukkol.
நீதிமொழிகள் 4:7 · Proverbs 4:7 அதிகாரம் · chapter →
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
kartharukkup payappadudhalae njaanathin aarambam; parisutharin arivae arivu.
நீதிமொழிகள் 9:10 · Proverbs 9:10 அதிகாரம் · chapter →
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
agandhai vandhaal ilachaiyum varum; thaazhndha sindhaiyullavargalidathil njaanam undu.
நீதிமொழிகள் 11:2 · Proverbs 11:2 அதிகாரம் · chapter →
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
aalosanaiyillaamaiyaal ennangal sithiyaamarpom; aalosanaikkaarar anegar irundhaal avaigal urudhippadum.
நீதிமொழிகள் 15:22 · Proverbs 15:22 அதிகாரம் · chapter →
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
un seygaigalaik kartharukku oppuvi; appozhudhu un yosanaigal urudhippadum.
நீதிமொழிகள் 16:3 · Proverbs 16:3 அதிகாரம் · chapter →
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
manushanudaiya irudhayam avanudaiya vazhiyai yosikkum; avanudaiya nadaigalai urudhippaduthugiravaro karthar.
நீதிமொழிகள் 16:9 · Proverbs 16:9 அதிகாரம் · chapter →
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
manushanudaiya irudhayathin ennangal anegam; aanaalum kartharudaiya yosanaiyae nilainirkum.
நீதிமொழிகள் 19:21 · Proverbs 19:21 அதிகாரம் · chapter →
ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.
njaanam kedagam, thiraviyamum kedagam; njaanam thannai udaiyavargalukku jeevanaith tharum; idhuvae arivin menmai.
பிரசங்கி 7:12 · Ecclesiastes 7:12 அதிகாரம் · chapter →
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
neengal valadhuburamaaych saayumbodhum, idadhuburamaaych saayumbodhum: vazhi idhuvae, idhilae nadavungal endru ungalukkup pinnaalae sollum vaarthaiyai ungal kaadhugal ketkum.
ஏசாயா 30:21 · Isaiah 30:21 அதிகாரம் · chapter →
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
manushanae, nanmai innadhendru avar unakku arivithirukkiraar; niyaayanjeydhu, irakkathaich sinegithu, un thevanukku munbaaga manathaazhmaiyaay nadappadhai allaamal verae ennathaik karthar unnidathil ketkiraar.
மீகா 6:8 · Micah 6:8 அதிகாரம் · chapter →
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
sathiyathaiyum ariveergal, sathiyam ungalai vidudhalaiyaakkum endraar.
யோவான் 8:32 · John 8:32 அதிகாரம் · chapter →
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ungalil oruvan njaanathil kuraivullavanaayirundhaal, yaavarukkum sambooranamaayk kodukkiravarum oruvaraiyum kadindhugollaadhavarumaagiya thevanidathil ketkakkadavan, appozhudhu avanukkuk kodukkappadum.
யாக்கோபு 1:5 · James 1:5 அதிகாரம் · chapter →
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
parathilirundhu varugira njaanamo mudhalaavadhu suthamulladhaayum, pinbu samaadhaanamum saandhamum inakkamumulladhaayum, irakkathaalum narkanigalaalum niraindhadhaayum, patsabaadhamillaadhadhaayum, maayamatradhaayumirukkiradhu.
யாக்கோபு 3:17 · James 3:17 அதிகாரம் · chapter →