17 verses · Tamil and Tanglish · Tamil Old Version

சுகம் பற்றிய வேத வசனங்கள் Bible verses about healing in Tamil

சுகமும் வியாதியும் பற்றிய வசனங்கள்: பரிகாரியாகிய கர்த்தர், அவருடைய தழும்புகளால் ஆறுதல், விசுவாசமுள்ள ஜெபம்.

Verses for healing and sickness: the Lord who heals, the stripes by which we are healed, the prayer of faith. Tap a reference to open the verse's own page, with the verses around it.

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

nee un thevanaagiya kartharin sathathaik kavanamaayk kettu, avar paarvaikkuch semmaiyaanavaigalaich seydhu, avar kattalaigalukkuch sevigoduthu, avarudaiya niyamangal yaavaiyum kaikkondaal, naan egipthiyarukku varappannina viyaadhigalil ondraiyum unakku varappannen; naanae un parigaariyaagiya karthar endraar.

யாத்திராகமம் 15:26 · Exodus 15:26 அதிகாரம் · chapter →

படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

padukkaiyinmel viyaadhiyaaykkidakkira avanaik karthar thaanguvaar; avanudaiya viyaadhiyilae avan padukkai muzhuvadhaiyum maatrippoduveer.

சங்கீதம் 41:3 · Psalms 41:3 அதிகாரம் · chapter →

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

en aathumaavae, kartharai sthothiri; avar seydha sagala ubagaarangalaiyum maravaadhae. avar un akkiramangalaiyellaam mannithu, un noygalaiyellaam kunamaakki,

சங்கீதம் 103:2-3 · Psalms 103:2-3 அதிகாரம் · chapter →

என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

en maganae, en vaarthaigalaik kavani; en vasanangalukku un seviyaich saay. avaigal un kangalai vittuppiriyaadhiruppadhaaga; avaigalai un irudhayathukkullae kaathukkol. avaigalaik kandubidikkiravargalukku avaigal jeevanum, avargal udalukkellaam aarokkiyamumaam.

நீதிமொழிகள் 4:20-22 · Proverbs 4:20-22 அதிகாரம் · chapter →

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

nammudaiya meerudhalgalinimitham avar kaayappattu, nammudaiya akkiramangalinimitham avar norukkappattaar; namakkuch samaadhaanathai undubannum aakkinai avarmel vandhadhu; avarudaiya thazhumbugalaal kunamaagirom.

ஏசாயா 53:5 · Isaiah 53:5 அதிகாரம் · chapter →

அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

appozhudhu vidiyarkaala veluppaippola un velicham ezhumbi un sugavaazhvu seekkirathil thulirthu un needhi unakku munnaalae sellum; kartharudaiya magimai unnaip pinnaalae kaakkum.

ஏசாயா 58:8 · Isaiah 58:8 அதிகாரம் · chapter →

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

karthaavae, ennaik kunamaakkum, appozhudhu kunamaaven; ennai iratsiyum, appozhudhu iratsikkappaduven; thevareerae en thudhi.

எரேமியா 17:14 · Jeremiah 17:14 அதிகாரம் · chapter →

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

avargal: unnai visaarippaaratra seeyon endru solli, unakkuth thallundaval endru perittabadiyaal, naan unakku aarokkiyam varappanni, un kaayangalai aatruven endru karthar sollugiraar.

எரேமியா 30:17 · Jeremiah 30:17 அதிகாரம் · chapter →

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

aanaalum en naamathukkup payandhirukkira ungalmel needhiyin sooriyan udhikkum; adhin settaigalingeezh aarokkiyam irukkum; neengal veliyae purappattuppoy, kozhutha kandrugalaippola valaruveergal.

மல்கியா 4:2 · Malachi 4:2 அதிகாரம் · chapter →

அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.

avar avalaip paarthu: magalae un visuvaasam unnai iratsithadhu, nee samaadhaanathodeboy, un vedhanai neengi, sugamaayiru endraar.

மாற்கு 5:34 · Mark 5:34 அதிகாரம் · chapter →

அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

appozhudhu visuvaasamulla jebam piniyaaliyai iratsikkum; karthar avanai ezhuppuvaar; avan paavanjeydhavanaanaal adhu avanukku mannikkappadum.

யாக்கோபு 5:15 · James 5:15 அதிகாரம் · chapter →

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

neengal sosthamadaiyumbadikku, ungal kutrangalai oruvarukkoruvar arikkaiyittu, oruvarukkaaga oruvar jebambannungal. needhimaan seyyum ookkamaana vendudhal migavum pelanulladhaayirukkiradhu.

யாக்கோபு 5:16 · James 5:16 அதிகாரம் · chapter →

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

naam paavangalukkuch sethu, needhikkup pizhaithirukkumbadikku, avardhaamae thamadhu sareerathilae nammudaiya paavangalaich siluvaiyinmel sumandhaar; avarudaiya thazhumbugalaal kunamaaneergal.

1 பேதுரு 2:24 · 1 Peter 2:24 அதிகாரம் · chapter →

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

piriyamaanavanae, un aathumaa vaazhgiradhubola nee ellaavatrilum vaazhndhu sugamaayirukkumbadi vendugiren.

3 யோவான் 1:2 · 3 John 1:2 அதிகாரம் · chapter →

மற்ற தலைப்புகள் Other themes