18 verses · Tamil and Tanglish · Tamil Old Version

உயிர்த்தெழுதல் வேத வசனங்கள் Easter Bible Verses in Tamil

புனித வெள்ளிக்கும் ஈஸ்டருக்குமான வசனங்கள்: நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்; நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; மரணமே, உன் கூர் எங்கே.

Verses for Good Friday and Easter: he was wounded for our transgressions, he is not here for he is risen, I am the resurrection and the life, O death where is thy sting. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

nammudaiya meerudhalgalinimitham avar kaayappattu, nammudaiya akkiramangalinimitham avar norukkappattaar; namakkuch samaadhaanathai undubannum aakkinai avarmel vandhadhu; avarudaiya thazhumbugalaal kunamaagirom.

ஏசாயா 53:5 · Isaiah 53:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

thoodhan andha sthireegalai nokki: neengal payappadaadhirungal; siluvaiyil araiyappatta yesuvaith thedugireergal endru ariven. avar ingae illai; thaam sonnabadiyae uyirthezhundhaar; kartharai vaitha idathai vandhu paarungal;

மத்தேயு 28:5-6 · Matthew 28:5-6 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

avan avargalai nokki: payappadaadhirungal, siluvaiyil araiyappatta nasareyanaagiya yesuvaith thedugireergal; avar uyirthezhundhaar, avar ingeyillai; idho, avarai vaitha idam.

மாற்கு 16:6 · Mark 16:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

andha sthireegal payappattuth thalaigavizhndhu tharaiyai nokki nirkaiyil, andha iranduberum avargalai nokki: uyirodirukkiravarai neengal marithoridathil thedugiradhenna? avar ingae illai, avar uyirthezhundhaar.

லூக்கா 24:5-6 · Luke 24:5-6 அதிகாரம் · chapter → WhatsApp ↗

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

thevan, thammudaiya oreberaana kumaaranai visuvaasikkiravan evano avan kettuppogaamal nithiyajeevanai adaiyumbadikku, avaraith thandharuli, ivvalavaay ulagathil anbugoorndhaar.

யோவான் 3:16 · John 3:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

yesu avalai nokki: naanae uyirthezhudhalum jeevanumaayirukkiren, ennai visuvaasikkiravan marithaalum pizhaippaan; uyirodirundhu ennai visuvaasikkiravanevanum endrendraikkum mariyaamalum iruppaan; idhai visuvaasikkiraayaa endraar.

யோவான் 11:25-26 · John 11:25-26 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

adharku yesu: thomaavae, nee ennaik kandadhinaalae visuvaasithaay, kaanaadhirundhum visuvaasikkiravargal paakkiyavaangal endraar.

யோவான் 20:29 · John 20:29 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

melum pidhaavin magimaiyinaalae kiristhu marithorilirundhu ezhuppappattadhubola, naamum pudhidhaana jeevanullavargalaay nadandhugollumbadikku, avarudaiya maranathirkullaakkum njaanasnaanathinaalae kiristhuvudanegooda adakkambannappattom.

ரோமர் 6:4 · Romans 6:4 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

marithorilirundhu ezhundha kiristhu ini marippadhillaiyendru arindhirukkirom; maranam ini avarai aandugolvadhillai.

ரோமர் 6:9 · Romans 6:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

ennavendraal, kartharaagiya yesuvai nee un vaayinaalae arikkaiyittu, thevan avarai marithorilirundhu ezhuppinaarendru un irudhayathilae visuvaasithaal iratsikkappaduvaay.

ரோமர் 10:9 · Romans 10:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

naan adaindhadhum ungalukkup piradhaanamaaga oppuvithadhum ennavendraal, kiristhuvaanavar vedhavaakkiyangalinbadi namadhu paavangalukkaaga marithu, adakkambannappattu, vedhavaakkiyangalinbadi moondraam naalil uyirthezhundhu,

1 கொரிந்தியர் 15:3-4 · 1 Corinthians 15:3-4 அதிகாரம் · chapter → WhatsApp ↗

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் பாக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.

ippadi naan avaraiyum avarudaiya uyirthezhudhalin vallamaiyaiyum, avarudaiya paadugalin paakkiyathaiyum arigiradharkum, avarudaiya maranathirkoppaana maranathirkullaagi, eppadiyaayinum naan marithorilirundhu uyirodezhundhiruppadharkuth thagudhiyaagumbadikkum.

பிலிப்பியர் 3:10 · Philippians 3:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.

nammudaiya iratsagaraagiya yesugiristhu pirasannamaanadhinaalae andhakkirubai ippozhudhu velippaduthappattadhu; avar maranathaip parigarithu, jeevanaiyum azhiyaamaiyaiyum suviseshathinaalae veliyarangamaakkinaar.

2 தீமோத்தேயு 1:10 · 2 Timothy 1:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

marithen, aanaalum, idho, sadhaagaalangalilum uyirodirukkiren, aamen; naan maranathirkum paadhaalathirkumuriya thiravugolgalai udaiyavaraayirukkiren.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · Revelation 1:18 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes