20 verses · Tamil and Tanglish · Tamil Old Version

சந்தோஷம் பற்றிய வேத வசனங்கள் Joy Bible Verses in Tamil

சந்தோஷத்தின் வசனங்கள்: கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தம்; கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

Verses of joy: the joy of the Lord is your strength, in thy presence is fulness of joy, rejoice in the Lord alway, they that sow in tears shall reap in joy. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

pinnum avan avargalai nokki: neengal poyk kozhumaiyaanadhaip pusithu, madhuramaanadhaik kudithu, ondrumillaadhavargalukkup pangugalai anuppungal; indha naal nammudaiya aandavarukkup parisuthamaana naal, visaarappadavendaam; kartharukkul magizhchiyaayiruppadhae ungaludaiya pelan endraan.

நெகேமியா 8:10 · Nehemiah 8:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

jeevamaarkkathai enakkuth theriyappaduthuveer; ummudaiya samugathil pariboorana aanandhamum, ummudaiya valadhu paarisathil nithiya perinbamum undu.

சங்கீதம் 16:11 · Psalms 16:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

avarudaiya kobam oru nimisham, avarudaiya thayavo neediyavaazhvu; saayangaalathil azhugai thangum, vidiyarkaalathilae kalippundaagum.

சங்கீதம் 30:5 · Psalms 30:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

needhimaangalae, kartharukkul magizhndhu kaligoorungal; semmaiyaana irudhayamullavargalae, neengal ellaarum aanandha muzhakkamidungal.

சங்கீதம் 32:11 · Psalms 32:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

poomiyin kudigalae, ellaarum kartharaik kembeeramaayp paadungal. magizhchiyodae kartharukku aaraadhanaiseydhu, aanandhasathathodae avar sannidhimun vaarungal.

சங்கீதம் 100:1-2 · Psalms 100:1-2 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

kartharukkul poorippaay magizhugiren; en thevanukkul en aathumaa kaligoorndhirukkiradhu; manavaalan aabaranangalinaal thannai alangarithukkollugiradharkum, manavaatti nagaigalinaal thannaich singaarithukkollugiradharkum oppaaga, avar iratsippin vasthirangalai enakku uduthi, needhiyin saalvaiyai enakkuth tharithaar.

ஏசாயா 61:10 · Isaiah 61:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.

un thevanaagiya karthar un naduvil irukkiraar; avar vallamaiyullavar, avar iratsippaar; avar unberil sandhoshamaay magizhndhu thammudaiya anbinimitham amarndhiruppaar; avar unberil kembeeramaayk kaligooruvaar.

செப்பனியா 3:17 · Zephaniah 3:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

ennudaiya sandhosham ungalil nilaithirukkumbadikkum, ungal sandhosham niraivaayirukkumbadikkum, ivaigalai ungalukkuch sonnen.

யோவான் 15:11 · John 15:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.

idhuvaraikkum neengal en naamathinaalae ondrum ketkavillai; kelungal, appozhudhu ungal sandhosham niraivaayirukkumbadi petrukkolveergal.

யோவான் 16:24 · John 16:24 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

parisutha aaviyin palathinaalae ungalukku nambikkai perugumbadikku, nambikkaiyin thevan visuvaasathinaal undaagum ellaavidha sandhoshathinaalum samaadhaanathinaalum ungalai nirappuvaaraaga.

ரோமர் 15:13 · Romans 15:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

eppozhudhum sandhoshamaayirungal. idaividaamal jebambannungal. ellaavatrileyum sthothiranjeyyungal; appadich seyvadhae kiristhu yesuvukkul ungalaikkurithuth thevanudaiya sithamaayirukkiradhu.

1 தெசலோனிக்கேயர் 5:16-18 · 1 Thessalonians 5:16-18 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,

avarai neengal kaanaamalirundhum avaridathil anbugoorugireergal; ippozhudhu avaraith tharisiyaamalirundhum avaridathil visuvaasam vaithu, sollimudiyaadhadhum magimaiyaal niraindhadhumaayirukkira sandhoshamullavargalaayk kaligoorndhu,

1 பேதுரு 1:8 · 1 Peter 1:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes