கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கும் ஆராதனைக்குமான வசனங்கள்: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி; உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை; இன்று உங்களுக்கு இரட்சகர் பிறந்திருக்கிறார்.
The Christmas verses, for a card, a greeting or the service: unto us a child is born, behold a virgin shall conceive, glory to God in the highest, for unto you is born this day a Saviour. Tap a reference to open the verse's own page, with the verses around it.
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
aadhalaal aandavar thaamae ungalukku oru adaiyaalathaik koduppaar; idho, oru kannigai karppavadhiyaagi oru kumaaranaip peruvaal, avarukku immaanuvel endru periduvaal.
ஏசாயா 7:14 · Isaiah 7:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
namakku oru paalagan pirandhaar; namakku oru kumaaran kodukkappattaar; karthathuvam avar tholinmelirukkum; avar naamam adhisayamaanavar, aalosanaik karthaa, vallamaiyulla thevan, nithiya pidhaa, samaadhaanappirabu ennappadum.
ஏசாயா 9:6 · Isaiah 9:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
eppiraathaa ennappatta pethlagemae, nee yoodheyaavilulla aayirangalukkullae siriyadhaayirundhum, isravelai aalappogiravar unnidathilirundhu purappattu ennidathil varuvaar; avarudaiya purappadudhal anaadhi naatkalaagiya poorvathinudaiyadhu.
மீகா 5:2 · Micah 5:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
aval oru kumaaranaip peruvaal, avarukku yesu endru periduvaayaaga; enenil avar thamadhu janangalin paavangalai neekki avargalai iratsippaar endraan.
மத்தேயு 1:21 · Matthew 1:21 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
avan: idho, oru kannigai karppavadhiyaagi oru kumaaranaip peruvaal; avarukku immaanuvel endru periduvaargal endru sonnaan. immaanuvel enbadharku thevan nammodu irukkiraar endru arthamaam.
மத்தேயு 1:23 · Matthew 1:23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
avargal andha natsathirathai kanda podhu, migundha aanandha sandhoshamadaindhaargal. avargal andha veettukkul piravesithu, pillaiyaiyum adhin thaayaagiya mariyaalaiyum kandu, saashtaangamaay vizhundhu adhaip panindhugondu, thangal pokkishangalaith thirandhu, ponnaiyum thoobavarkkathaiyum vellaippolathaiyum adharkuk kaanikkaiyaaga vaithaargal.
மத்தேயு 2:10-11 · Matthew 2:10-11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
thevadhoodhan avalai nokki: mariyaalae, payappadaadhae, nee thevanidathil kirubaibetraay. idho, nee karppavadhiyaagi oru kumaaranaip peruvaay; avarukku yesu endru periduvaayaaga.
லூக்கா 1:30-31 · Luke 1:30-31 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
aval than mudharperaana kumaaranaippetru, sathirathilae avargalukku idamillaadhirundhabadiyinaal, pillaiyaith thunigalil sutri, munnanaiyilae kidathinaal.
லூக்கா 2:7 · Luke 2:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
thevadhoodhan avargalai nokki: payappadaadhirungal; idho, ellaa janathukkum migundha sandhoshathai undaakkum narseydhiyai ungalukku arivikkiren. indru kartharaagiya kiristhu ennum iratsagar ungalukkuth thaaveedhin oorilae pirandhirukkiraar.
லூக்கா 2:10-11 · Luke 2:10-11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
unnadhathilirukkira thevanukku magimaiyum, poomiyilae samaadhaanamum, manusharmel piriyamum undaavadhaaga endru solli, thevanaith thudhithaargal.
லூக்கா 2:14 · Luke 2:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
andha vaarthai maamsamaagi, kirubaiyinaalum sathiyathinaalum niraindhavaraay, namakkullae vaasambanninaar; avarudaiya magimaiyaik kandom; adhu pidhaavukku orae peraanavarudaiya magimaikku etra magimaiyaagavae irundhadhu.
யோவான் 1:14 · John 1:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
thevan, thammudaiya oreberaana kumaaranai visuvaasikkiravan evano avan kettuppogaamal nithiyajeevanai adaiyumbadikku, avaraith thandharuli, ivvalavaay ulagathil anbugoorndhaar.
யோவான் 3:16 · John 3:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
naam puthirasuvigaarathaiyadaiyumbadi niyaayappiramaanathirkuk keezhppattavargalai meettukkollathakkadhaaga, kaalam niraiverinabodhu, sthireeyinidathir pirandhavarum niyaayappiramaanathirkuk keezhaanavarumaagiya thammudaiya kumaaranai thevan anuppinaar.
கலாத்தியர் 4:4-5 · Galatians 4:4-5 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
paavigalai iratsikka kiristhu yesu ulagathil vandhaar engira vaarthai unmaiyum ellaa angigarippukkum paathiramumaanadhu; avargalil piradhaana paavi naan.
1 தீமோத்தேயு 1:15 · 1 Timothy 1:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
enenil ellaa manusharukkum iratsippai alikkathakka thevagirubaiyaanadhu pirasannamaagi,
தீத்து 2:11 · Titus 2:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
thammudaiya orae peraana kumaaranaalae naam pizhaikkumbadikku thevan avarai ivvulagathilae anuppinadhinaal thevan nammel vaitha anbu velippattadhu.
1 யோவான் 4:9 · 1 John 4:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗