15 verses · Tamil and Tanglish · Tamil Old Version

பிறந்தநாள் பற்றிய வேத வசனங்கள் Birthday Bible Verses in Tamil

பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் எழுதவும் செய்தியாக அனுப்பவும் ஏற்ற வசனங்கள்: கர்த்தர் உன்னை ஆசீர்வதித்துக் காக்கக்கடவர், நீடித்த ஆயுசினால் திருப்தியாக்குவேன், எங்கள் நாட்களை எண்ணப் போதியும், இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்.

Verses to write in a birthday card or send as a wish: the Lord bless thee and keep thee, with long life will I satisfy him, teach us to number our days, this is the day which the Lord hath made. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

karthar unnai aaseervadhithu, unnaik kaakkakkadavar. karthar thammudaiya mugathai unmel piragaasikkappanni, unmel kirubaiyaayirukkakkadavar. karthar thammudaiya mugathai unmel pirasannamaakki, unakkuch samaadhaanam kattalaiyidakkadavar enbadhae.

எண்ணாகமம் 6:24-26 · Numbers 6:24-26 அதிகாரம் · chapter → WhatsApp ↗

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

thunmaarkkarudaiya aalosanaiyil nadavaamalum, paavigaludaiya vazhiyil nillaamalum, pariyaasakkaarar utkaarum idathil utkaaraamalum, kartharudaiya vedhathil piriyamaayirundhu, iravum pagalum avarudaiya vedhathil thiyaanamaayirukkira manushan paakkiyavaan. avan neerkkaalgalin oramaay nadappattu, than kaalathil than kaniyaith thandhu, ilaiyudhiraadhirukkira marathaippoliruppaan; avan seyvadhellaam vaaykkum.

சங்கீதம் 1:1-3 · Psalms 1:1-3 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

naangal engal vaazhnaalellaam kaligoorndhu magizhumbadi, kaalaiyilae engalai umadhu kirubaiyaal thirupthiyaakkum.

சங்கீதம் 90:14 · Psalms 90:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

nanmaiyinaal un vaayaith thirupthiyaakkugiraar; kazhugukkuch samaanamaay un vayadhu thirumba vaala vayadhubolaagiradhu.

சங்கீதம் 103:5 · Psalms 103:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

kartharukkup payandhu, avar vazhigalil nadakkiravan evano, avan paakkiyavaan. un kaigalin pirayaasathai nee saappiduvaay; unakkup paakkiyamum nanmaiyum undaayirukkum.

சங்கீதம் 128:1-2 · Psalms 128:1-2 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.

எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

piriyamaanavanae, un aathumaa vaazhgiradhubola nee ellaavatrilum vaazhndhu sugamaayirukkumbadi vendugiren.

3 யோவான் 1:2 · 3 John 1:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes