கொடுத்தல், பணம், தேவையின் நிறைவு பற்றிய வசனங்கள்: தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டுவாருங்கள்; கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்; கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.
Verses on giving, money and provision: bring ye all the tithes into the storehouse, give and it shall be given unto you, God loveth a cheerful giver, the blessing of the Lord maketh rich. Tap a reference to open the verse's own page, with the verses around it.
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
un thevanaagiya kartharai ninaippaayaaga; avarae un pidhaakkalukku aanaiyittukkodutha thammudaiya udanbadikkaiyai urudhippaduthumbadi, innaalil unakku undaayirukkiradhubola, aisuvariyathaich sambaadhikkiradharkaana pelanai unakkuk kodukkiravar.
உபாகமம் 8:18 · Deuteronomy 8:18 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
naan ilainjanaayirundhen, mudhirvayadhullavanumaanen, aanaalum needhimaan kaividappattadhaiyum, avan sandhadhi appathukku irandhudhirigiradhaiyum naan kaanavillai.
சங்கீதம் 37:25 · Psalms 37:25 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
un porulaalum, un ellaa vilaivin mudharpalanaalum kartharaik kanambannu. appozhudhu un kalanjiyangal pooranamaay nirambum; un aalaigalil thiraatsarasam purandodum.
நீதிமொழிகள் 3:9-10 · Proverbs 3:9-10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
kartharin aaseervaadhamae aisuvariyathaith tharum; adhanodae avar vedhanaiyaik koottaar.
நீதிமொழிகள் 10:22 · Proverbs 10:22 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
udhaaragunamulla aathumaa sezhikkum; evan thanneer paaychugiraano avanukkuth thanneer paaychappadum.
நீதிமொழிகள் 11:25 · Proverbs 11:25 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
ezhaikku irangugiravan kartharukkuk kadangodukkiraan; avan koduthadhai avar thirumbak koduppaar.
நீதிமொழிகள் 19:17 · Proverbs 19:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
karunaikkannan aaseervadhikkappaduvaan; avan than aagaarathil tharithiranukkuk kodukkiraan.
நீதிமொழிகள் 22:9 · Proverbs 22:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
en aalayathil aagaaram undaayirukkumbadith thasamabaagangalaiyellaam pandasaalaiyilae konduvaarungal; appozhudhu naan vaanathin palaganigalaith thirandhu, idangollaamarpogumattum ungalmel aaseervaadhathai varushikkamaattenovendru adhinaal ennaich sodhithup paarungal endru senaigalin karthar sollugiraar.
மல்கியா 3:10 · Malachi 3:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
poomiyilae ungalukkup pokkishangalaich serthu vaikkavendaam; ingae poochiyum thuruvum avaigalaik kedukkum; ingae thirudarum kannamittuth thiruduvaargal. paralogathilae ungal pokkishangalaich serthu vaiyungal; angae poochiyaavadhu thuruvaavadhu kedukkiradhum illai; angae thirudar kannamittuth thirudugiradhum illai. ungal pokkisham engeyirukkiradho angae ungal irudhayamum irukkum.
மத்தேயு 6:19-21 · Matthew 6:19-21 அதிகாரம் · chapter → WhatsApp ↗
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
mudhalaavadhu thevanudaiya raajyathaiyum avarudaiya needhiyaiyum thedungal; appozhudhu ivaigalellaam ungalukkuk koodak kodukkappadum.
மத்தேயு 6:33 · Matthew 6:33 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
kodungal, appozhudhu ungalukkum kodukkappadum; amukkik kulukkich sarindhu vizhumbadi nandraay alandhu, ungal madiyilae poduvaargal; neengal endha alavinaal alakkireergalo andha alavinaal ungalukkum alakkappadumendraar.
லூக்கா 6:38 · Luke 6:38 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
ippadip pirayaasappattu, palaveenaraith thaangavum, vaangugiradhaippaarkkilum kodukkiradhae paakkiyam endru kartharaagiya yesu sonna vaarthaigalai ninaikkavum vendumendru ellaavidhathileyum ungalukkuk kaanbithen endraan.
அப்போஸ்தலர் 20:35 · Acts 20:35 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
pinnum naan sollugiradhennavenil, siruga vidhaikkiravan siruga aruppaan, peruga vidhaikkiravan peruga aruppaan. avanavan visanamaayumalla, kattaayamaayumalla, than manadhil niyamithabadiyae kodukkakkadavan; ursaagamaayk kodukkiravanidathil thevan piriyamaayirukkiraar.
2 கொரிந்தியர் 9:6-7 · 2 Corinthians 9:6-7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
avanavan visanamaayumalla, kattaayamaayumalla, than manadhil niyamithabadiyae kodukkakkadavan; ursaagamaayk kodukkiravanidathil thevan piriyamaayirukkiraar.
2 கொரிந்தியர் 9:7 · 2 Corinthians 9:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
melum, neengal ellaavatrilum eppozhudhum sambooranamudaiyavargalaayum, sagalavidha narkiriyaigalilum perugugiravargalaayumirukkumbadiyaaga, thevan ungalidathil sagalavidha kirubaiyaiyum perugacheyya vallavaraayirukkiraar.
2 கொரிந்தியர் 9:8 · 2 Corinthians 9:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
en thevan thammudaiya aisuvariyathinbadi ungal kuraivaiyellaam kiristhu yesuvukkul magimaiyilae niraivaakkuvaar.
பிலிப்பியர் 4:19 · Philippians 4:19 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
pana aasai ellaath theemaikkum veraayirukkiradhu; silar adhai ichithu, visuvaasathaivittu vazhuvi, thangalai uruvak kuthikkondirukkiraargal.
1 தீமோத்தேயு 6:10 · 1 Timothy 6:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,
ivvulagathilae aisuvariyamullavargal irumaappaana sindhaiyullavargalaayiraamalum, nilaiyatra aisuvariyathin mel nambikkai vaiyaamalum, naam anubavikkiradharkuch sagalavidha nanmaigalaiyum namakkuch sambooranamaayk kodukkira jeevanulla thevanmel nambikkai vaikkavum, nanmai seyyavum, narkiriyaigalil aisuvariyavaangalaagavum, thaaraalamaayk kodukkiravargalum, udhaaragunamullavargalumaayirukkavum, nithiya jeevanaip patrikkollumbadi varungaalathirkaagath thangalukku nalla aadhaarathaip pokkishamaaga vaikkavum avargalukkuk kattalaiyidu,
1 தீமோத்தேயு 6:17-19 · 1 Timothy 6:17-19 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
andriyum nanmaiseyyavum, thaanadharmambannavum maravaadhirungal; ippadippatta paligalinmel thevan piriyamaayirukkiraar.
எபிரெயர் 13:16 · Hebrews 13:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗