20 verses · Tamil and Tanglish · Tamil Old Version

தகப்பன் பற்றிய வேத வசனங்கள் Father’s Day Bible Verses in Tamil

தந்தையர் தினத்துக்கும் அப்பாவின் பிறந்தநாளுக்கும் தகப்பன் பற்றிய வசனங்கள்: தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல; பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்.

Verses about a father, for Father's Day or his birthday: like as a father pitieth his children, train up a child in the way he should go, a good man leaveth an inheritance, the father of the righteous shall greatly rejoice. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

un thevanaagiya karthar unakkuk kodukkira thesathilae un naatkal needithiruppadharku, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga.

யாத்திராகமம் 20:12 · Exodus 20:12 அதிகாரம் · chapter → WhatsApp ↗

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

indru naan unakkuk kattalaiyidugira indha vaarthaigalai un irudhayathil irukkakkadavadhu. nee avaigalai un pillaigalukkuk karuthaayp podhithu, nee un veettil utkaarndhirukkirabodhum, vazhiyil nadakkirabodhum, paduthukkollugirabodhum, ezhundhirukkirabodhum avaigalaik kurithup pesi,

உபாகமம் 6:6-7 · Deuteronomy 6:6-7 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

kartharaich sevikkiradhu ungal paarvaikku aagaadhadhaayk kandaal, pinnai yaaraich sevippeergal endru indru therindhu kollungal; nadhikku appurathil ungal pidhaakkal sevitha thevargalaich sevippeergalo? neengal vaasambannugira thesathuk kudigalaagiya emoriyarin thevargalaich sevippeergalo? naanum en veettaarumovendraal, kartharaiyae sevippom endraan.

யோசுவா 24:15 · Joshua 24:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

thammudaiya parisutha vaasasthalathilirukkira thevan, thikkatra pillaigalukkuth thagappanum, vidhavaigalukku niyaayam visaarikkiravarumaayirukkiraar.

சங்கீதம் 68:5 · Psalms 68:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

en maganae, nee kartharudaiya sitsaiyai arpamaaga ennaadhae, avar kadindhugollumbodhu sorndhubogaadhae. thagappan thaan nesikkira puthiranaich sitsikkiradhubola, kartharum evanidathil anbugoorugiraaro avanaich sitsikkiraar.

நீதிமொழிகள் 3:11-12 · Proverbs 3:11-12 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

nallavan than pillaigalin pillaigalukkuch sudhandharam vaithuppogiraan: paaviyin aasthiyo needhimaanukkaaga serthuvaikkappadum.

நீதிமொழிகள் 13:22 · Proverbs 13:22 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.

naan vandhu poomiyaich sangaarathaal adikkaadhabadikku, avan pidhaakkaludaiya irudhayathaip pillaigalidathirkum, pillaigaludaiya irudhayathai avargal pidhaakkalidathirkum thiruppuvaan.

மல்கியா 4:6 · Malachi 4:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

aagaiyaal, pollaadhavargalaagiya neengal ungal pillaigalukku nalla eevugalaik kodukka arindhirukkumbodhu, paralogathilirukkira ungal pidhaa thammidathil vendikkollugiravargalukku nanmaiyaanavaigalaik koduppadhu adhiga nichayam allavaa?

மத்தேயு 7:11 · Matthew 7:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

ezhundhu purappattu, than thagappanidathil vandhaan. avan thoorathil varumbodhae, avanudaiya thagappan avanaik kandu, manadhurugi, odi, avan kazhuthaik kattikkondu, avanai muthanjeydhaan.

லூக்கா 15:20 · Luke 15:20 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

pidhaakkalae, neengalum ungal pillaigalaik kobappaduthaamal, kartharukketra sitsaiyilum podhanaiyilum avargalai valarppeergalaaga.

எபேசியர் 6:4 · Ephesians 6:4 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

melum, thammudaiya raajyathirkum magimaikkum ungalai azhaitha thevanukku neengal paathiraraay nadakkavendumendru, thagappan than pillaigalukkuch sollugiradhubola, naangal ungalil ovvoruvanukkum puthiyum therudhalum echarippum sonnadhai arindhirukkireergal.

1 தெசலோனிக்கேயர் 2:11-12 · 1 Thessalonians 2:11-12 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

neengal sitsaiyaich sagikkiravargalaayirundhaal thevan ungalaip puthiraraaga enni nadathugiraar; thagappan sitsiyaadha puthiranundo?

எபிரெயர் 12:7 · Hebrews 12:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes