நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
nee varugaiyilum aaseervadhikkappattiruppaay, nee pogaiyilum aaseervadhikkappattiruppaay.
உபாகமம் 28:6 · Deuteronomy 28:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
19 verses · Tamil and Tanglish · Tamil Old Version
கிரகப்பிரவேசம், புது வீடு, வீட்டு ஆசீர்வாதத்துக்கான வசனங்கள்: கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்; நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்; இந்த வீட்டுக்குச் சமாதானம்; நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.
Verses for a housewarming, a new home or a house blessing: except the Lord build the house, as for me and my house we will serve the Lord, peace be to this house, the blessing of the Lord upon the habitation of the just. Tap a reference to open the verse's own page, with the verses around it.
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
nee varugaiyilum aaseervadhikkappattiruppaay, nee pogaiyilum aaseervadhikkappattiruppaay.
உபாகமம் 28:6 · Deuteronomy 28:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
karthar un kalanjiyangalilum, nee kaiyidum ellaa velaiyilum unakku aaseervaadham kattalaiyiduvaar; un thevanaagiya karthar unakkuk kodukkum thesathilae unnai aaseervadhippaar.
உபாகமம் 28:8 · Deuteronomy 28:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
kartharaich sevikkiradhu ungal paarvaikku aagaadhadhaayk kandaal, pinnai yaaraich sevippeergal endru indru therindhu kollungal; nadhikku appurathil ungal pidhaakkal sevitha thevargalaich sevippeergalo? neengal vaasambannugira thesathuk kudigalaagiya emoriyarin thevargalaich sevippeergalo? naanum en veettaarumovendraal, kartharaiyae sevippom endraan.
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
ippodhum umadhu adiyaanin veedu endraikkum umakku munbaaga irukkumbadi adhai aaseervadhitharulum; kartharaana aandavaraagiya thevareer adhaich sonneer, ummudaiya aaseervaadhathinaalae umadhu adiyaanin veedu endraikkum aaseervadhikkappattiruppadhaaga endraan.
2 சாமுவேல் 7:29 · 2 Samuel 7:29 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
ippodhum umadhu adiyaanin veedu endraikkum umakku munbaaga irukkumbadikku, adhai aaseervadhitharulineer; kartharaagiya thevareer adhai aarvadhithabadiyinaal, adhu endraikkum aaseervadhikkappattirukkum endraan.
1 நாளாகமம் 17:27 · 1 Chronicles 17:27 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
en jeevanulla naalellaam nanmaiyum kirubaiyum ennaith thodarum; naan kartharudaiya veettilae needitha naatkalaay nilaithiruppen.
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
aagaiyaal pollaappu unakku neridaadhu, vaadhai un koodaarathai anugaadhu.
சங்கீதம் 91:10 · Psalms 91:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
uthamamaana vazhiyilae vivegamaay nadappen; eppozhudhu ennidathil varuveer! en veettilae uthama irudhayathodu nadandhugolluven.
சங்கீதம் 101:2 · Psalms 101:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
aasthiyum aisuvariyamum avan veettilirukkum; avanudaiya needhi endraikkum nirkum.
சங்கீதம் 112:3 · Psalms 112:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.
karthar un pokkaiyum un varathaiyum idhumudharkondu endraikkum kaappaar.
சங்கீதம் 121:8 · Psalms 121:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
un alangathirkullae samaadhaanamum, un aramanaigalukkullae sugamum iruppadhaaga.
சங்கீதம் 122:7 · Psalms 122:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
karthar veettaik kattaaraagil, adhaik kattugiravargalin pirayaasam virudhaa; karthar nagarathaik kaavaaraagil kaavalaalar vizhithirukkiradhu virudhaa.
சங்கீதம் 127:1 · Psalms 127:1 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
kartharukkup payandhu, avar vazhigalil nadakkiravan evano, avan paakkiyavaan. un kaigalin pirayaasathai nee saappiduvaay; unakkup paakkiyamum nanmaiyum undaayirukkum.
சங்கீதம் 128:1-2 · Psalms 128:1-2 அதிகாரம் · chapter → WhatsApp ↗
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
thunmaarkkanudaiya veettil kartharin saabam irukkiradhu, needhimaangaludaiya vaasasthalathaiyo avar aaseervadhikkiraar.
நீதிமொழிகள் 3:33 · Proverbs 3:33 அதிகாரம் · chapter → WhatsApp ↗
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகல விதைப்பொருள்களும் நிறைந்திருக்கும்.
veedu njaanathinaalae kattappattu, vivegathinaalae nilainiruthappadum. arivinaalae araigalil arumaiyum inimaiyumaana sagala vidhaipporulgalum niraindhirukkum.
நீதிமொழிகள் 24:3-4 · Proverbs 24:3-4 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
en janam samaadhaana thaabarangalilum, nilaiyaana vaasasthalangalilum, amaidhiyaayth thangum idangalilum kudiyirukkum.
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
oru veettil piravesikkirabodhu: indha veettukkuch samaadhaanam undaavadhaagavendru mudhalaavadhu sollungal.
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
adharku avargal: kartharaagiya yesugiristhuvai visuvaasi, appozhudhu neeyum un veettaarum iratsikkappaduveergal endru solli,
அப்போஸ்தலர் 16:31 · Acts 16:31 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
enenil, endha veedum oruvanaal undaakkappadum; ellaavatraiyum undubanninavar thevan.