கவலைப்படும் மனதுக்கான வசனங்கள்: நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்; உன் பாரத்தைக் கர்த்தர்மேல் வைத்துவிடு; நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
Verses for an anxious mind: be careful for nothing, cast thy burden upon the Lord, take no thought for the morrow, let not your heart be troubled. Tap a reference to open the verse's own page, with the verses around it.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
naan marana irulin pallathaakkilae nadandhaalum pollaappukkup payappaden; thevareer ennodegooda irukkireer; umadhu kolum umadhu thadiyum ennaith thetrum.
சங்கீதம் 23:4 · Psalms 23:4 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
naan kartharaith thedinen, avar enakkuch sevigoduthu, ennudaiya ellaap payathukkum ennai neengalaakkivittaar.
சங்கீதம் 34:4 · Psalms 34:4 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
neengal amarndhirundhu, naanae thevanendru arindhugollungal; jaadhigalukkullae uyarndhiruppen, poomiyilae uyarndhiruppen.
சங்கீதம் 46:10 · Psalms 46:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
kartharmel un paarathaivaithuvidu, avar unnai aadharippaar; needhimaanai orubodhum thallaadavottaar.
சங்கீதம் 55:22 · Psalms 55:22 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
naan payappadugira naalil ummai nambuven.
சங்கீதம் 56:3 · Psalms 56:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
en ullathil visaarangal perugugaiyil, ummudaiya aarudhalgal en aathumaavaith thetrugiradhu.
சங்கீதம் 94:19 · Psalms 94:19 அதிகாரம் · chapter → WhatsApp ↗
மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
manushanudaiya irudhayathilulla kavalai adhai odukkum; nalvaarthaiyo adhai magizhchiyaakkum.
நீதிமொழிகள் 12:25 · Proverbs 12:25 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ummai urudhiyaayp patrikkonda manadhaiyudaiyavan ummaiyae nambiyirukkirabadiyaal, neer avanaip poorana samaadhaanathudan kaathukkolveer.
ஏசாயா 26:3 · Isaiah 26:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.
ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
aagaiyaal ennathai unbom, ennathaik kudippom endru ungal jeevanukkaagavum; ennathai uduppom endru ungal sareerathukkaagavum kavalaippadaadhirungal endru, ungalukkuch sollugiren; aagaarathaip paarkkilum jeevanum, udaiyaippaarkkilum sareeramum viseshithavaigal allavaa? aagaayathup patsigalaik kavanithuppaarungal; avaigal vidhaikkiradhumillai, arukkiradhumillai, kalanjiyangalil serthuvaikkiradhumillai; avaigalaiyum ungal paramabidhaa pizhaippoottugiraar; avaigalaippaarkkilum neengal viseshithavargal allavaa? kavalaippadugiradhinaalae ungalil evan than sareera alavodu oru muzhathaik koottuvaan?
மத்தேயு 6:25-27 · Matthew 6:25-27 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
aagaiyaal naalaikkaagak kavalaippadaadhirungal; naalaiyathinam thannudaiyavaigalukkaagak kavalaippadum. andhandha naalukku adhinadhin paadu podhum.
மத்தேயு 6:34 · Matthew 6:34 அதிகாரம் · chapter → WhatsApp ↗
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
varuthappattup paaranjumakkiravargalae neengal ellaarum ennidathil vaarungal; naan ungalukku ilaippaarudhal tharuven.
மத்தேயு 11:28 · Matthew 11:28 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
kavalaippadugiradhinaal ungalil evan than sareera alavodu oru muzhathaik koottuvaan. migavum arpamaana kaariyamudhalaay ungalaal seyyakkoodaadhirukka, matravaigalukkaaga neengal kavalaippadugiradhenna?
லூக்கா 12:25-26 · Luke 12:25-26 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
ungal irudhayam kalangaadhiruppadhaaga; thevanidathil visuvaasamaayirungal, ennidathilum visuvaasamaayirungal. en pidhaavin veettil anega vaasasthalangal undu; appadiyillaadhirundhaal, naan ungalukkuch solliyiruppen; oru sthalathai ungalukkaaga aayathambannappogiren. naan poy ungalukkaaga sthalathai aayathambanninabinbu, naan irukkira idathilae neengalum irukkumbadi, naan marubadiyum vandhu ungalai ennidathil serthukkolluven.
யோவான் 14:1-3 · John 14:1-3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
samaadhaanathai ungalukku vaithuppogiren, ennudaiya samaadhaanathaiyae ungalukkuk kodukkiren; ulagam kodukkirabiragaaram naan ungalukkuk kodukkiradhillai. ungal irudhayam kalangaamalum payappadaamalumiruppadhaaga.
யோவான் 14:27 · John 14:27 அதிகாரம் · chapter → WhatsApp ↗
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
maranamaanaalum, jeevanaanaalum, thevadhoodhargalaanaalum, adhigaarangalaanaalum, vallamaigalaanaalum, nigazhgaariyangalaanaalum, varungaariyangalaanaalum, uyarvaanaalum, thaazhvaanaalum, verendhach sirushtiyaanaalum nammudaiya kartharaagiya kiristhu yesuvilulla thevanudaiya anbaivittu nammaip pirikkamaattaadhendru nichayithirukkiren.
ரோமர் 8:38-39 · Romans 8:38-39 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.
பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
thevasamaadhaanam ungal irudhayangalil aalakkadavadhu, idharkendrae neengal orae sareeramaaga azhaikkappatteergal; nandriyaridhalullavargalaayumirungal.
கொலோசெயர் 3:15 · Colossians 3:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
samaadhaanathin karthardhaamae eppozhudhum sagalavidhathilum ungalukkuch samaadhaanathaith thandharuluvaaraaga. karthar ungalanaivarodungooda iruppaaraaga.
2 தெசலோனிக்கேயர் 3:16 · 2 Thessalonians 3:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
avar ungalai visaarikkiravaraanabadiyaal, ungal kavalaigalaiyellaam avarmel vaithuvidungal.
1 பேதுரு 5:7 · 1 Peter 5:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗