38 verses · Tamil and Tanglish · Tamil Old Version

வாக்குத்தத்த வசனங்கள் Bible Promise Verses in Tamil

தமிழ் கிறிஸ்தவர்கள் பற்றிக்கொள்ளும் வாக்குத்தத்த வசனங்கள்: நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உங்கள் குறைவையெல்லாம் என் தேவன் நிறைவாக்குவார்.

The promise verses Tamil Christians claim and carry: I will never leave thee nor forsake thee, no weapon formed against thee shall prosper, I know the thoughts that I think toward you, my God shall supply all your need. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

naan unnodae irundhu, nee pogira idathilellaam unnaik kaathu, indhath thesathukku unnaith thirumbivarappannuven; naan unakkuch sonnadhaich seyyumalavum unnaik kaividuvadhillai endraar.

ஆதியாகமம் 28:15 · Genesis 28:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

ungal thevanaagiya kartharaiyae sevikkakkadaveergal; avar un appathaiyum un thanneeraiyum aaseervadhippaar. viyaadhiyai unnilirundhu vilakkuven.

யாத்திராகமம் 23:25 · Exodus 23:25 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

neengal palangondu thidamanadhaayirungal, avargalukkup payappadavum thigaikkavum vendaam; un thevanaagiya, karthardhaamae unnodegooda varugiraar; avar unnai vittu vilaguvadhum illai; unnaik kaividuvadhum illai endru sonnaan.

உபாகமம் 31:6 · Deuteronomy 31:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

karthardhaamae unakku munbaagap pogiravar, avar unnodae iruppaar; avar unnai vittu vilaguvadhumillai, unnaik kaividuvadhumillai; nee payappadavum kalangavum vendaam endraan.

உபாகமம் 31:8 · Deuteronomy 31:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

nee uyirodirukkum naalellaam oruvanum unakku munbaaga edhirthu nirpadhillai: naan moseyodae irundhadhubola, unnodum iruppen; naan unnaivittu vilaguvadhumillai, unnaik kaividuvadhumillai.

யோசுவா 1:5 · Joshua 1:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.

யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

en naamam tharikkappatta en janangal thangalaith thaazhthi, jebambanni, en mugathaith thedi, thangal pollaadha vazhigalaivittuth thirumbinaal, appozhudhu paralogathilirukkira naan kettu, avargal paavathai mannithu, avargal thesathukku kshemathaik koduppen.

2 நாளாகமம் 7:14 · 2 Chronicles 7:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

naan unakkup podhithu, nee nadakkavendiya vazhiyai unakkuk kaattuven; unmel en kannai vaithu, unakku aalosanai solluven.

சங்கீதம் 32:8 · Psalms 32:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

singakkuttigal thaazhchiyadaindhu pattiniyaayirukkum; kartharaith thedugiravargalukko oru nanmaiyum kuraivubadaadhu.

சங்கீதம் 34:10 · Psalms 34:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

thevanaagiya karthar sooriyanum kedagamumaanavar; karthar kirubaiyaiyum magimaiyaiyum aruluvaar; uthamamaay nadakkiravargalukku nanmaiyai vazhangaadhiraar.

சங்கீதம் 84:11 · Psalms 84:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

avan ennai nokkik kooppiduvaan, naan avanukku maruutharavu arulicheyven; aabathil naanae avanodirundhu, avanaith thappuvithu, avanaik kanappaduthuven.

சங்கீதம் 91:15 · Psalms 91:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

en aathumaavae, kartharai sthothiri; avar seydha sagala ubagaarangalaiyum maravaadhae. avar un akkiramangalaiyellaam mannithu, un noygalaiyellaam kunamaakki,

சங்கீதம் 103:2-3 · Psalms 103:2-3 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.

karthar unnai ellaath theengukkum vilakkik kaappaar; avar un aathumaavaik kaappaatruvaar. karthar un pokkaiyum un varathaiyum idhumudharkondu endraikkum kaappaar.

சங்கீதம் 121:7-8 · Psalms 121:7-8 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

kartharukkuk kaathirukkiravargalo pudhuppelanadaithu, kazhugugalaippolach settaigalai adithu ezhumbuvaargal; avargal odinaalum ilaippadaiyaargal, nadandhaalum sorndhubogaargal.

ஏசாயா 40:31 · Isaiah 40:31 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.

ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

nee thanneergalaik kadakkumbodhu naan unnodu iruppen; nee aarugalaik kadakkumbodhu avaigal unmel puraluvadhillai; nee akkiniyil nadakkumbodhu vegaadhiruppaay; akkinijuvaalai unberil patraadhu.

ஏசாயா 43:2 · Isaiah 43:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

unakku virodhamaay uruvaakkappadum endha aayudhamum vaaykkaadhebom; unakku virodhamaay niyaayathil ezhumbum endha naavaiyum nee kutrappaduthuvaay; idhu kartharudaiya oozhiyakkaararin sudhandharamum ennaalundaana avargaludaiya needhiyumaayirukkiradhendru karthar solgiraar.

ஏசாயா 54:17 · Isaiah 54:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

karthar nithamum unnai nadathi, magaa varatsiyaana kaalangalil un aathumaavaith thirupthiyaakki, un elumbugalai ninamulladhaakkuvaar; nee neerppaaychalaana thottathaippolavum, vatraadha neerootraippolavum iruppaay.

ஏசாயா 58:11 · Isaiah 58:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.

எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

ennai nokkik kooppidu, appozhudhu naan unakku utharavu koduthu, nee ariyaadhadhum unakku ettaadhadhumaana periya kaariyangalai unakku arivippen.

எரேமியா 33:3 · Jeremiah 33:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

naan ungalidathil anuppina en periya senaiyaagiya vettukkiligalum, pachaikkiligalum, musukkattaip poochigalum, pachaip puzhukkalum patsitha varushangalin vilaivai ungalukkuth thirumba alippen.

யோவேல் 2:25 · Joel 2:25 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

en aalayathil aagaaram undaayirukkumbadith thasamabaagangalaiyellaam pandasaalaiyilae konduvaarungal; appozhudhu naan vaanathin palaganigalaith thirandhu, idangollaamarpogumattum ungalmel aaseervaadhathai varushikkamaattenovendru adhinaal ennaich sodhithup paarungal endru senaigalin karthar sollugiraar.

மல்கியா 3:10 · Malachi 3:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

mudhalaavadhu thevanudaiya raajyathaiyum avarudaiya needhiyaiyum thedungal; appozhudhu ivaigalellaam ungalukkuk koodak kodukkappadum.

மத்தேயு 6:33 · Matthew 6:33 அதிகாரம் · chapter → WhatsApp ↗

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

varuthappattup paaranjumakkiravargalae neengal ellaarum ennidathil vaarungal; naan ungalukku ilaippaarudhal tharuven.

மத்தேயு 11:28 · Matthew 11:28 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

naan ungalukkuk kattalaiyitta yaavaiyum avargal kaikkollumbadi avargalukku ubadhesam pannungal; idho, ulagathin mudivubariyandham sagala naatkalilum naan ungaludanegooda irukkiren endraar. aamen.

மத்தேயு 28:20 · Matthew 28:20 அதிகாரம் · chapter → WhatsApp ↗

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

samaadhaanathai ungalukku vaithuppogiren, ennudaiya samaadhaanathaiyae ungalukkuk kodukkiren; ulagam kodukkirabiragaaram naan ungalukkuk kodukkiradhillai. ungal irudhayam kalangaamalum payappadaamalumiruppadhaaga.

யோவான் 14:27 · John 14:27 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

andriyum, avarudaiya theermaanathinbadi azhaikkappattavargalaay thevanidathil anbugoorugiravargalukkuch sagalamum nanmaikku edhuvaaga nadakkiradhendru arindhirukkirom.

ரோமர் 8:28 · Romans 8:28 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

adharku avar: en kirubai unakkuppodhum; palaveenathilae en palam pooranamaay vilangum endraar. aagaiyaal, kiristhuvin vallamai enmel thangumbadi, en palaveenangalaikkurithu naan migavum sandhoshamaay menmaibaaraattuven.

2 கொரிந்தியர் 12:9 · 2 Corinthians 12:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

en thevan thammudaiya aisuvariyathinbadi ungal kuraivaiyellaam kiristhu yesuvukkul magimaiyilae niraivaakkuvaar.

பிலிப்பியர் 4:19 · Philippians 4:19 அதிகாரம் · chapter → WhatsApp ↗

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

neengal pana aasaiyillaadhavargalaay nadandhu, ungalukku irukkiravaigal podhumendru ennungal; naan unnaivittu vilaguvadhumillai, unnaik kaividuvadhumillai endru avar solliyirukkiraarae.

எபிரெயர் 13:5 · Hebrews 13:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

piriyamaanavanae, un aathumaa vaazhgiradhubola nee ellaavatrilum vaazhndhu sugamaayirukkumbadi vendugiren.

3 யோவான் 1:2 · 3 John 1:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

avargaludaiya kanneer yaavaiyum thevan thudaippaar; ini maranamumillai, thukkamumillai, alarudhalumillai, varuthamumillai; mundhinavaigal ozhindhuboyina endru vilambinadhu.

வெளிப்படுத்தின விசேஷம் 21:4 · Revelation 21:4 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes