நண்பர்கள் பற்றிய வசனங்கள்: சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; சகோதரனிலும் அதிக அன்பாய்ச் சிநேகிப்பவனுமுண்டு; ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை; இரும்பை இரும்பு கூர்மையாக்கும்.
Verses about friends: a friend loveth at all times, there is a friend that sticketh closer than a brother, greater love hath no man than this, iron sharpeneth iron. Tap a reference to open the verse's own page, with the verses around it.
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
adharku rooth: naan ummaip pinbatraamal ummaivittuth thirumbip povadhaikkurithu, ennodae pesavendaam; neer pogum idathirku naanum varuven; neer thangum idathilae naanum thanguven; ummudaiya janam ennudaiya janam; ummudaiya thevan ennudaiya thevan.
ரூத் 1:16 · Ruth 1:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
avan savulodae pesi mudindha pinbu, yonathaanudaiya aathumaa thaaveedhin aathumaavodae ondraay isaindhirundhadhu; yonathaan avanaith than uyiraippolach sinegithaan.
1 சாமுவேல் 18:1 · 1 Samuel 18:1 அதிகாரம் · chapter → WhatsApp ↗
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
yonathaan thaaveedhaith than aathumaavaip polach sinegithadhinaal, avanum ivanum udanbadikkaibannik kondaargal.
1 சாமுவேல் 18:3 · 1 Samuel 18:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
njaanigalodae sanjarikkiravan njaanamadaivaan; moodarukkuth thozhano naasamadaivaan.
நீதிமொழிகள் 13:20 · Proverbs 13:20 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
sinegidhan ellaak kaalathilum sinegippaan; idukkanil udhavavae sagodharan pirandhirukkiraan.
நீதிமொழிகள் 17:17 · Proverbs 17:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
sinegidharullavan sinegam paaraattavendum; sagodharanilum adhiga sondhamaaych sinegippavanumundu.
நீதிமொழிகள் 18:24 · Proverbs 18:24 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
kobakkaaranukkuth thozhanaagaadhae; ukkiramulla manushanodae nadavaadhae. appadich seydhaal, nee avanudaiya vazhigalaik katrukkondu, un aathumaavukkuk kanniyai varuvippaay.
நீதிமொழிகள் 22:24-25 · Proverbs 22:24-25 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
sinegidhan adikkum adigal unmaiyaanavaigal; sathuru idum muthangalo vanjanaiyullavaigal.
நீதிமொழிகள் 27:6 · Proverbs 27:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
parimaladhailamum sugandhadhoobamum irudhayathaik kalippaakkuvadhubola, oruvanudaiya sinegidhan utkaruthaana aalosanaiyinaal paaraattum inbamaanadhu kalippaakkum.
நீதிமொழிகள் 27:9 · Proverbs 27:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.
irumbai irumbu karukkidum; appadiyae manushanum than sinegidhanudaiya mugathaik karukkidugiraan.
நீதிமொழிகள் 27:17 · Proverbs 27:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
ondiyaayiruppadhilum iruvar koodiyiruppadhu nalam; avargaludaiya pirayaasathinaal avargalukku nalla palanundaagum. oruvan vizhundhaal avan udanaali avanaith thookkividuvaan; ondiyaayirundhu vizhugiravanukku aiyo, avanaith thookkividath thunaiyillaiyae. iranduberaayp paduthukkondirundhaal avargalukkuch soodundaagum; ondiyaayirukkiravanukkuch soodundaavadhu eppadi? oruvanai yaadhaamoruvan merkolla vandhaal iruvarum avanukku edhirthunirkalaam; muppurinool seekkiramaay araadhu.
பிரசங்கி 4:9-12 · Ecclesiastes 4:9-12 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
oruvanai yaadhaamoruvan merkolla vandhaal iruvarum avanukku edhirthunirkalaam; muppurinool seekkiramaay araadhu.
பிரசங்கி 4:12 · Ecclesiastes 4:12 அதிகாரம் · chapter → WhatsApp ↗
மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
manushar ungalukku eppadich seyyavendumendru virumbugireergalo, appadiyae neengalum avargalukkuch seyyungal.
லூக்கா 6:31 · Luke 6:31 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
oruvan than sinegidharukkaagath than jeevanaik kodukkira anbilum adhigamaana anbu oruvaridathilumillai.
யோவான் 15:13 · John 15:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
naan ungalukkuk karpikkira yaavaiyum neengal seyveergalaanaal, en sinegidharaayiruppeergal. ini naan ungalai oozhiyakkaararendru sollugiradhillai, oozhiyakkaaran than ejamaan seygiradhai ariyamaattaan. naan ungalaich sinegidhar endren, enenil en pidhaavinidathil naan kelvippatta ellaavatraiyum ungalukku arivithen.
யோவான் 15:14-15 · John 15:14-15 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
sagodhara sinegathilae oruvarmeloruvar patsamaayirungal; kanambannugiradhilae oruvarukkoruvar mundhikkollungal.
ரோமர் 12:10 · Romans 12:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
oruvaraiyoruvar thaangi, oruvarberil oruvarukkuk kuraibaadu undaanaal, kiristhu ungalukku mannithadhubola, oruvarukkoruvar manniyungal.
கொலோசெயர் 3:13 · Colossians 3:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
aagaiyaal neengal seydhuvarugirabadiyae, oruvaraiyoruvar thetri, oruvarukkoruvar pakthiviruthi undaagumbadi seyyungal.
1 தெசலோனிக்கேயர் 5:11 · 1 Thessalonians 5:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
melum, anbukkum narkiriyaigalukkum naam evappadumbadi oruvaraiyoruvar kavanithu; sabai koodivarudhalaich silar vittuvidugiradhubola naamum vittuvidaamal, oruvarukkoruvar puthisollakkadavom; naalaanadhu sameebithuvarugiradhai evvalavaayp paarkkireergalo avvalavaayp puthisollavendum.
எபிரெயர் 10:24-25 · Hebrews 10:24-25 அதிகாரம் · chapter → WhatsApp ↗