17 verses · Tamil and Tanglish · Tamil Old Version

தாய் பற்றிய வேத வசனங்கள் Mother’s Day Bible Verses in Tamil

அன்னையர் தினத்துக்கும் அம்மாவின் பிறந்தநாளுக்கும் தாய் பற்றிய வசனங்கள்: உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல; ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ.

Verses about a mother, for Mother's Day or her birthday: honour thy father and thy mother, her children arise up and call her blessed, as one whom his mother comforteth, can a woman forget her sucking child. Tap a reference to open the verse's own page, with the verses around it.

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

un thevanaagiya karthar unakkuk kodukkira thesathilae un naatkal needithiruppadharku, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga.

யாத்திராகமம் 20:12 · Exodus 20:12 அதிகாரம் · chapter → WhatsApp ↗

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

un thevanaagiya karthar unakkuk kodukkira thesathilae un naatkal needithiruppadharkum, nee nandraayiruppadharkum, un thevanaagiya karthar unakkuk kattalaiyittabadiyae, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga.

உபாகமம் 5:16 · Deuteronomy 5:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

indhap pillaikkaaga vinnappambanninen; naan kartharidathil ketta en vinnappathinbadi enakkuk kattalaiyittaar.

1 சாமுவேல் 1:27 · 1 Samuel 1:27 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள். தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

aval udai palamum alangaaramumaayirukkiradhu; varungaalathaippatriyum magizhugiraal. than vaayai njaanam vilangath thirakkiraal; thayaiyulla podhagam aval naavinmel irukkiradhu.

நீதிமொழிகள் 31:25-26 · Proverbs 31:25-26 அதிகாரம் · chapter → WhatsApp ↗

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

sthireeyaanaval than karppathin pillaikku irangaamal, than paalaganai marappaalo? avargal marandhaalum, naan unnai marappadhillai.

ஏசாயா 49:15 · Isaiah 49:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

oruvanai avan thaay thetruvadhubol naan ungalaith thetruven; neengal erusalemilae thetrappaduveergal.

ஏசாயா 66:13 · Isaiah 66:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

appozhudhu yesu thammudaiya thaayaiyum arugae nindra thamakku anbaayirundha seeshanaiyum kandu, thammudaiya thaayai nokki: sthireeyae, adho, un magan endraar. pinbu andhach seeshanai nokki: adho, un thaay endraar annerathil andhach seeshan avalaith thannidamaay etrukkondaan.

யோவான் 19:26-27 · John 19:26-27 அதிகாரம் · chapter → WhatsApp ↗

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது.

pillaigalae, ungal petraarukkuk kartharukkul keezhppadiyungal, idhu niyaayam. unakku nanmai undaayiruppadharkum, poomiyilae vaazhnaal needithiruppadharkum, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga enbadhae vaakkuthathamulla mudhalaam karpanaiyaayirukkiradhu.

எபேசியர் 6:1-3 · Ephesians 6:1-3 அதிகாரம் · chapter → WhatsApp ↗

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

andha visuvaasam mundhi un paattiyaagiya lovisaalukkullum un thaayaagiya ainikkeyaalukkullum nilaithirundhadhu; adhu unakkullum nilaithirukkiradhendru nichayithirukkiren.

2 தீமோத்தேயு 1:5 · 2 Timothy 1:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗

மற்ற தலைப்புகள் Other themes