Psalms 87 · 7 verses

சங்கீதம் 87 Psalms 87 in Tamil and Tanglish

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · Tamil Old Version · ஒவ்வொரு வசனத்தின் கீழும் Tanglish வரி — sangeedham 87.

1

அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

avar asthibaaram parisutha parvadhangalil irukkiradhu.

2

கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

karthar yaakkobin vaasasthalangalellaavatraippaarkkilum seeyonin vaasalgalil piriyamaayirukkiraar.

3

தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

thevanudaiya nagaramae! unnaik kurithu magimaiyaana viseshangal vasanikkappadum. (selaa.)

4

என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலும் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;

ennai arindhavargalukkullae raagaabaiyum paabilonaiyum kurithup pesuven; idho pelisthiyarilum theeriyarilum, ethiyoppiyarilum kooda, innaan angae pirandhaanendrum;

5

சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

seeyonaikkurithu innaan innaan adhilae pirandhaanendrum sollappadum; unnadhamaanavardhaamae adhai sthirappaduthuvaar.

6

கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

karthar janangalaip perezhudhumbodhu, innaan adhilae pirandhaan endru avargalaith thogaiyiduvaar. (selaa.)

7

எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

engal ootrugalellaam unnil irukkiradhu endru paaduvaarum aaduvaarum egamaaych solluvaargal.